தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

மைத்திரியின் உள்ளூர் விசாரணை என்பது நீதி கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை!– அனந்தி!

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நவீபிள்ளைக்கு 15000 கடிதங்கள் அனுப்பி வைப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:36.44 AM GMT ]
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 15000 கடிதங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக கடமையாற்றிய நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்கள் அடங்கிய 15000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் மற்றும் உயிரிழந்த பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைக் குழுவினர் இந்த கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள், என அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakx7.html
1115 வாக்கெண்ணும் நிலையங்களில் 300க்கு மாத்திரமே கண்காணிப்பாளர்கள் அனுமதி!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:52.42 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது மொத்தமுள்ள 1115 வாக்கு எண்ணும் நிலையங்களில் 300 நிலையங்களுக்கு மாத்திரமே கண்காணிப்பாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், கடந்த வெள்ளிக்கிழமையன்று தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 300 நிலையங்களிலும் 7 கண்காணிப்பு அமைப்புக்கள் பகிர்ந்த நிலையில் செயற்படவுள்ளன.
அஞ்சல் வாக்களிப்பு நிலையங்களை பொறுத்தவரையில் 304 நிலையங்களில் 70 நிலையங்களுக்கு கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
எதிர்வரும் செவ்வாய்,  புதன்கிழமைகளில் நடைபெறவுள்ள அஞ்சல் வாக்களிப்புக்களின் போது மொத்தம் 541,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை அஞ்சல் மூல வாக்களிப்பின் போது சுமார் 4000 கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று பெபரல் மற்றும் கபே அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajoy.html
மைத்திரியின் உள்ளூர் விசாரணை என்பது நீதி கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை!– அனந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:03.59 AM GMT ]
மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 
எல்.எல்.ஆர்.சி. ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற உள்ளூர் பொறிமுறையிலான விசாரணைகள் என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை நாங்கள் நாடியிருக்கின்றோம்.
இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்றை நடத்த முடியாது என்றும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதற்குப் பதிலாக உள்நாட்டில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இது குறித்து சர்வதேச செய்திச் சேவையொன்று இவரிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajoz.html

Geen opmerkingen:

Een reactie posten