தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

சர்வதேச கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும்!- இராணுவம்

சட்டவிரோத கட் அவுட்டுகளை உடன் அகற்றுமாறு கண்டி மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:18.44 AM GMT ]
கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத கட் அவுட்களை உடனடியாக அகற்றுமாறு கண்டி மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றாடலுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 7 நாட்களுக்குள் இந்த கட் அவுட்டுக்கள் அகற்றப்படா விட்டால், ஆணையாளரை நீதிமன்றத்துக்கு அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.
தேர்தல் சட்டமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை
தேர்தல் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரை பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல், பொலிஸ் மா அதிபரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன எட்டியாராச்சி இதனை கூறினார்.
மேலும் அவர் தேர்தல் சட்டமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo1.html
மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது - நுகேகொடயில் 7 பெண்கள் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 05:08.15 AM GMT ]
மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேஷியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி வளைப்புக்களிலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதானவர்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவதாக ஜொகூர் பொலிஸ் தலைமை அதிகாரி முகமது மொக்தார் முகம்மட் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
இதன்படி கைதானவர்களில் 102 உள்நாட்டவர்கள், 627 சீனர்கள், வியட்னாமைச் சேர்ந்தவர்கள்- 1,341, தாய்லாந்து- 555, இந்தோனேஷியா- 229, காம்போடியா- 13, பிலிப்பைன்ஸ்-62, மியன்மார்- 16, சிங்கப்பூர்- 1, லாவோஸ்- 4, இலங்கை- 6, இந்தியா- 29 மற்றும் வெனிசுவெல-1  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் விபச்சாரம் – 7 பெண்கள் கைது
நுகேகொட நாவல பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அதில் இருந்த 7 பெண்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அந்த நிலையத்தின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 24 மற்றும் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனுராதபுரம், காலி, பன்னலை, இம்புல்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo3.html

காலநிலை காரணமாக 25000 பேர் பாதிப்பு- மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 05:52.46 AM GMT ]
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை இன்று தற்காலிகமாக குறைவடையலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக காலி வரையான கடலோரங்களிலும் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம்
தெரிவிக்கின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக 25000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்படுவதால் தேசிய கட்டட ஆய்வு நிலையம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
அத்துடன் மன்னார், புத்தளம் மற்றும் பொலன்னறுவை , மட்டக்களப்பு வீதிகளில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு , திருகோணமலை தவிர்ந்த மற்றைய அனைத்து ரயில் போக்குவரத்துக்களுக்கும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
வௌ்ளநிலைமை காரணமாக நேற்று இரவு சில ரயில் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் கடும் மழை: மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இடப்பெயர்வுகளின்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் இன்பராஜன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக வெள்ள நீரினால் சூழப்பட்ட வெளியேற முடியாத பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
வாகரை,வாழைச்சேனை,ஓட்டமாவடி,கிரான்,செங்கலடி,வெல்லாவெளி ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவின் விசேட உத்தரவுக்கமைய தேவையான நிதியொதுக்கீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு தெரிவித்தார்.
அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகள் காத்தான்குடி,மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தங்குமிடம் மற்றும் உடனடி உணவுகள் வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து இளைஞர் பேரவையால் நிவாரண உதவி!
மட்டக்களப்பு நொச்சிமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினரால் சமைத்த உணவு சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதி தற்போது பெய்த மழை காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியதுடன், வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதுடன், பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேசம் நீரில் மூழ்கியமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டமை காரணமாக வீட்டிற்குள் நீர் புகுந்தமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது யாத்திரைக் குழுவினரால் அங்கு பாதிக்கப்பட்ட இருநூறு மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் பாண் என்பவற்றை கிராம உத்தியோகத்தர் மற்றும் மாதர் சங்கத் தலைவி திருமதி.எஸ்.வேவி ஆகியோரிடம் கையளித்தனர்.
உணவு வழங்கி வைக்கும் போது அதன் உப தலைவர் வ.நவநீதன், உப செயலாளர் க.நவரெத்தினம், செயலாளர் ந.குகதர்சன், உறுப்பினர்களான சொ.ரதன், க.சஞ்ஜீவன், சு.மனோஜ், க.யோகராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்உதவியை புரிந்த மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினருக்கு பொதுமக்கள் சார்பாகவும், மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக பலர் இடம்பெயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை காணரமாக வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 23899 பேர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர் என வாகரை பிரதேச செயலக வாட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இவர்களின் இடைத்தங்கல் முகாம்களில் 1864 குடும்பங்களில் 6333 நபர்களும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் 5247 குடும்பங்களில் 17566 நபர்கள் தஞ்மடைந்து வாழ்ந்து வருகின்றனர். வாகரைப் பிரதேசத்தின் உப்பாறு வாவி நிரம்பி பெருக்கெடுத்துள்ளதால் வாவியினை அண்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் குறித்த பகுதியினுள் வாழும் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை பாடசாலையில் 25 குடும்பங்களில் 66 பேரும், வட்டவான், இறாலோடை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 23 குடும்பங்களில் 66 பேரும், மாங்கேணி, மாவடியோடை தேவாலயத்தில் 32 குடும்பங்களில் 100 பேரும், கிருமிச்சை பாடசாலை கட்டடத்தில் 28 குடும்பங்களில் 79 பேரும், பனிச்சங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 10 குடும்பங்களில் 41 பேரும், சல்லத்தீவு பாலர் பாடசாலைக் கட்டடத்தில் 14 பேரும், பனிச்சங்கேணி பாடசாலை கட்டடத்தில் 32 குடும்பங்களில் 100 பேரும், ஊரியன்கட்டு பாடசாலை கட்டடத்தில் 365 குடும்பங்களில் 1265 பேரும், வாகரை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 18 குடும்பங்களில் 57 பேரும், அம்பந்தனாவெளி, வம்மிவட்டான் பாடசாலைக் கட்டடத்தில் 562 குடும்பங்களில் 1854 பேரும், பால்ச்சேனை பாடசாலைக் கட்டடத்தில் 408 குடும்பங்களில் 1383 பேரும், புச்சாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 71 குடும்பங்களில் 211 பேரும், கதிரவெளி பாடசாலைக் கட்டடத்தில் 204 குடும்பங்களில் 713 பேரும், ஆண்டான்குளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 70 குடும்பங்களில் 246 பேரும், கட்டுமுறிவு பாடசாலைக் கட்டடத்தில் 25 குடும்பங்களில் 81 பேரும் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இன்னும் மழை நீடிக்குமாயின் மேலும் பலர் இடம்பெயரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும், இதனால் தங்களுடைய உடைமைகள் என்பன சேதமாக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இப்பகுதியில் வேளான்மை செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo4.html
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி அன்னப் பறவை பக்கம் போகிறார்?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:09.49 AM GMT ]
முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க இன்னும் சில தினங்களில் முக்கியமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட அமைச்சரின் இந்த தீர்மானம் குறித்து தொடர்ந்தும் செய்திகள் வெளியாகிய போதிலும் அது பகிரங்க இரகசியமான ஒன்றாக இருந்து வருகிறது.
முன்னாள் பிரதமரின் இந்த தீர்மானத்துடன் அவரது புதல்வரான ஆளும் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமசிங்கவும் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பார் எனக் கூறப்படுகிறது.
ராஜபக்ஷ ஆட்சியில் அநீதிக்கு உள்ளாகிய அமைச்சர்களில் ஒருவரான ரட்ணசிறி விக்ரமநாயக்க, ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்து வருகிறார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு மிக நெருக்கமான நபர் என்பதே அவர் ஒதுக்கி வைக்கப்பட்டமைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo5.html
தபால் மூல வாக்களிப்பதற்கு பொலிஸாருக்கு விசேட தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 06:35.41 AM GMT ]
தபால் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள பொலிஸாருக்கு விசேட தினமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரச ஊழியர்கள் எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விசேட சில பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதியைத் தெரிவதற்காக தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர்.
பொலிஸ் தலைமையகம், மாகாண, மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், ஜனாதிபதி, அமைச்சு பாதுகாப்புப் பிரிவு, பொலிஸ் பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றில் கடமையாற்றி வரும் அதிகாரிகள் 23 மற்றும் 24ம் திகதிகளில் வாக்களிக்க உள்ளனர்.
ஏனைய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 26ம் திகதி வாக்களிக்க உள்ளனர்.
குறித்த தினத்திலும் தபால் மூல வாக்களிப்புச் செய்ய முடியாதவர்களுக்கு எதிர்வரும் 30ம் திகதி விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo6.html

சர்வதேச கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும்!- இராணுவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:11.23 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்லும் போது அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் விசேட அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரின் பரிந்துரையின்கீழ் இந்த அனுமதி பெறப்படவேண்டும் என்று இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இந்த அனுமதிபெறல் நடவடிக்கை நீக்கப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதுவரை இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் இருந்து உத்தியோகபூர்வ கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்று ருவான் வணிகசூரிய  குறிப்பிட்டுள்ளார்..
தேர்தல்கள் ஆணையாளரின் பரிந்துரை இன்றி அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில பெபரல் மற்றும் சிஎம்இவி அமைப்புக்கள் இதுவரை 100 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கான பரிந்துரையை தேர்தல்கள் ஆணையாளரிடம் இருந்து பெற்றுள்ளன.
இதனை தவிர பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து 60 கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajo0.html

Geen opmerkingen:

Een reactie posten