நளினி - முருகன் சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 12:59.47 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
குறித்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கணவன், மனைவி என்பதால் இவர்கள், 15 நாட்களுக்கு, ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்ள சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை, 7. 30 மணிக்கு முருகனை, பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில், அரை மணி நேரம் நளினி - முருகன் சந்திப்பு நடந்தது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakxz.html
தொண்டமான் சொன்னாலும் மலையக மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்க மாட்டார்கள்: ராதாகிருஸ்ணன்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:14.00 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.
பெருந்தோட்ட தமிழ் மக்களின் 80 முதல் 90 வீதமான வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கும்.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் வழங்கவில்லை.
பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள் தேவை, அவர்கள் இன்னமும் 200 ஆண்டுகள் பழமையான லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்டப் பகுதியில் இருக்கும் ஒரு தேசிய பாடசாலையை பெயரிட முடியுமா? ஒன்று கூட கிடையாது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பழமையான தொழிற்சங்கம் என்ற போதிலும் அவர்கள் மக்களுக்காக என்ன செய்துள்ளார்கள்.
நாம் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளேயாகும். தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். எனினும் அவர்கள் அவ்வாறு எதனையும் இதுவரையில் செய்ததில்லை.
தொண்டமான் என்ன சொன்னாலும் பெருந்தோட்ட மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கே ஆதரவளிப்பார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையும் அதுவே, முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என ராதாகிருஸ்ணன் கொழும்பு ஞாயிறு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakx6.html
ஆளும் கட்சியின் பலர் கடும் அதிருப்தி நிலையில் இருக்கின்றார்கள்: வசந்த சேனாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:06.02 AM GMT ]
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகின்றோம்.
மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டினால் புதிய கட்சியொன்றை அமைப்பார் என அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் மைத்திரிபால சிறிசேன கடமையாற்றுவார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கட்சியை விட்டு விரட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்ட திட்டமே, ஜனாதிபதியே கட்சியின் தலைவராக பதவி வகிக்க வேண்டும் என்பது. எனவே இந்த வழிமுறையைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
கொள்கைகளை மதிக்கும் நேர்மையான அரசியல்வாதிகள் ஆளும் கட்சியில் இருக்கின்றார்கள்.
மாற்றமொன்றை எதிர்பார்த்து இளைஞர்கள் மைத்திரிபால சிறிசேனவை சூழ்ந்து கொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவார், இதனை புரிந்து கொண்ட அரசாங்கம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு கடும் இடையூறு விளைவித்து வருகின்றது.
ஜனாதிபதி தோற்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என சொல்லப்படுகின்றது.
நான் நினைத்தேன் ஜனாதிபதி ஓரளவிற்கேனும் புத்திசாலி என்று, எனினும் இவ்வாறான அடிப்படை அரசியில் அமைப்பு விடயங்களைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவராக இருக்கின்றார் என வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakx4.html
தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை இரு தரப்புமே தெளிவாக முன்வைக்கவில்லை: சுமந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 02:50.15 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலின் போது பத்து லட்சம் வரையிலான வாக்காளர்களை கட்டுப்படுத்தும் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் காணப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இதுவரையில் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
போரின் பின்னர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளிக்காட்ட முயற்சிக்கின்றது. எனினும், இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை.
பலாலி பிரதேசத்தில் 6500 ஏக்கர் வரையிலான காணிகளை அரசாங்கம் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்தும் எம் மக்கள் இடம்பெயர் முகாம்களில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் வடக்கு மக்கள் மீளவும் போர் ஒன்றை தொடுக்க வாய்ப்பு கிடையாது என எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakx3.html
Geen opmerkingen:
Een reactie posten