தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

முன்னாள் பிரதமர் பற்றி ரகசியம் ஒன்றை வெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ!

விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இராணுவ நடவடிக்கை தொடர்பில் தன்னை தவிர பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்த ஒரே அரசியல்வாதி முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதனால், புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை சம்பந்தமான விடயத்தில் வேறு நபர்கள் உரிமை கோர முயற்சித்தாலும் அவர்களின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு நாடு பிளவுப்படுவதை தடுத்து நிறுத்துமாறு அனைவரும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடித்து மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழும் உரிமையை பெற்று தருமாறு மாத்திரமே மக்கள் கோரினர்.
நான்கு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் நாங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டோம்.
பிரச்சினை தீர்க்கப்படும் போது என்னை தவிர பாதுகாப்புச் சபைக்கு வந்த ஒரே அரசியல்வாதி முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க. வேறு எவரும் வரவில்லை. நாங்கள் வேறு எவரையும் அழைக்கவில்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahpy.html

Geen opmerkingen:

Een reactie posten