[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 11:39.20 AM GMT ]
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய முறையில் கடமையை செய்ய தவறிய காரணத்தினால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடமையில் இருந்த பொலிஸார் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று காலை அறிவித்திருந்த நிலையில், தற்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சார்ஜன் ஒருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்று நள்ளிரவு ஒரு குழுவினர் தேர்தல் பிரச்சார மேடையை நோக்கியும் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் 15 முதல் 20 வெற்று துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp1.html
இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 11:43.51 AM GMT ]
எதிர்கால சந்ததியினர் நாட்டை அல்ல உலகத்தை வெல்ல வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இதற்காக அனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிலர் இனவாதத்தை தூண்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp2.html
கூட்டமைப்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாம்!– டக்ளஸ் கண்டுபிடிப்பு.
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 11:47.09 AM GMT ]
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போர் காரணமாக அழிவடைந்த யாழ்பாப்பாணத்தை கட்டியெழுப்ப இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு அதிகளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதமான பணத்தை கூட வட மாகாணசபை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதமான நிதி மீளவும் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.
மக்களின் நலனை கருத்திற் கொண்டே அரசாங்கம் திட்டங்களை முன்னெடுக்கின்றது.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp3.html
Geen opmerkingen:
Een reactie posten