தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

ஜனாதிபதிக்கு நல்வாழ்த்து கூறி படிவத்தில் கையொப்பம் இடப்போவதில்லை!- யாழ்.பல்கலை. ஆசிரியர் சங்கம்!

எதிரணிக்கு தாவத் தயாராகும் பைஸர் முஸ்தபா
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 10:08.44 AM GMT ]
ஆளம் கட்சி பிரதி அமைச்சரான பைஸர் முஸ்தபா, அரசாங்கத்தில் இருந்து விலகி, வெகு விரைவில் பொது எதிரணியில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராகவும், தனியார் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு பிரதியமைச்சராகவும் பைஸர் முஸ்தபா பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaho3.html
ஜனாதிபதிக்கு நல்வாழ்த்து கூறி படிவத்தில் கையொப்பம் இடப்போவதில்லை!- யாழ்.பல்கலை. ஆசிரியர் சங்கம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 10:22.08 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்தாவுக்கு நல்வாழ்த்துக் கூறி கையொப்பம் வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுப்பியிருக்கும் வாழ்த்துக் கையெழுத்து படிவத்தில் ஒருபோதும் கையொப்பம் இடப்போவதில்லை. என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவுக்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கையொப்பமிடுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அந்தப் படிவத்தில் ஜனாதிபதி மஹிந்தா தங்கு தடையின்றி அறிவை மேம்படுத்தவும், அபிவிருத்தியை மேம்படுத்தவும் அவருக்கு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதில் நாங்க ள் கையொப்பமிடவேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியிருப்பதாக எமக்கு கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த படிவம் துணைவேந்தரினா ல் பீடாதிபதிகள் ஊடாக துறைத்தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அந்தப் படிவத்தை பத்திரிகையில் பிரசுரிக்க தடைகள் எவையும் இல்லை. எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இது ஒரு மோசமான நடவடிக்கையாகும் என சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இவ்வாறான வாழ்த்து தெரிவிக்கும் அட்டைகளில் கையொப்பமிட மாட்டோம். எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaho5.html

Geen opmerkingen:

Een reactie posten