தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

இலங்கை உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தப்பபட வேண்டும்: பாரதிய ஜனதா கட்சி



ஜனாதிபதியின் கட்அவுட்களால் பார்வை பாதிப்பு: சுற்றாடல் ஆர்வலர்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:53.54 AM GMT ]
பாரிய பிரசார கட்அவுட்கள் காரணமாக பார்வை பாதிப்புகள் ஏற்படுவதாக சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்அவுட்களில் இருக்கும் ஒரே நிறத்திலான வர்ணங்கள் தொடர்ந்தும் கண்களில் பார்ப்பதால், இந்த பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பொலிதீன் தயாரிப்புகளுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் தோரணங்கள் குறுகிய காலத்தில் சுற்றாடலுக்குள் கொண்டு வரப்பட்டு, அவை எரித்து அழிக்கப்படும் போது அதில் இருந்து வெளியாகும் டயோக்ஷின் மற்றும் பியூரான் போன்ற இரசாயனங்கள் வளியில் கலப்பதால், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என சுற்றாடல் பாதுகாப்பு பொறுப்பு அமைப்பின் பணிப்பாளர் சஜீவ சாம்கர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq0.html
நூற்றுக்கு 4000, 5000 வீதம் தரகுப் பணம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது: ராஜித
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 09:07.48 AM GMT ]
நூற்றுக்கு 4000 முதல் 5000 வீதம் தரகுப் பணம் பெற்றுக் கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நூற்றுக்கு 5 அல்லது 10 வீதமே தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது.
டுபாயின் மெரியோட் ஹோட்டல், லங்லோ நிறுவனம் ஆகியன யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய தகவல்கள் எதிர்காலத்தில் அம்பலப்படுத்தப்படும்.
நல்லாட்சிக்கு பதிலாக இன்று நாட்டில் ஊழல் மோசடிகளே இடம்பெறுகின்றன.
1977ம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்கவிற்கு எதிரான எதிர்ப்பலை இறுதி வாரத்திலேயே உருவானது. எனினும், தற்போது மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான எதிர்ப்பலை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் உருவாகியுள்ளது.
ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்தவிடம் நாம் கோரியிருந்தோம்.
எனினும் அந்தக் கோரிக்கையை புறந்தள்ளி ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துகின்றார்.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே ஜனாதிபதியின் நோக்கமாக அமைந்துள்ளது.
இன்று இளைஞர்கள் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
நல்லாட்சி ஏற்படுத்த வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர் என ராஜித சேனாரட்ன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq1.html
குளிரில் பெண்ணொருவர் மரணம்- வீதியை மூடிய வெள்ளம்! பாதையை விட்டு விலகிய பேருந்துகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 09:28.56 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஐய்யாத்துரை வசந்தி (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குளிரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பெண் குளிரினால் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
வெள்ளப்பெருக்கு காரணமான பஸ்கள் பாதையை விட்டு விலகல்!
வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.
கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், திருக்கோயிலில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் இவ்வாறு வெள்ளம் காரணமாக ஒரே நேரத்தில் 50 மீற்றர் இடைவெளிகளில் வீதியை விட்டு வெளியே சென்றுள்ளது.
இதன்போது எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டவில்லை என தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq2.html
இலங்கை உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தப்பபட வேண்டும்: பாரதிய ஜனதா கட்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 09:51.57 AM GMT ]
இலங்கை உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுபடுத்துவதற்காக உறுதியான வேலை திட்டம் அவசியம் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் நாடு உட்பட இந்தியாவில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு உறுதியான வேலை திட்டம் கொண்ட அரசாங்கத்தை எதிர்பாருங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை மறைதலை பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் மோடி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்காக கடந்த மாதம் 6ம் திகதிககு உட்பட்ட கால பகுதியில் அதிக பலன் கிடைதிருப்பதாகவும் அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன் சுட்டிகாட்டியிருந்தார்.
விசேடமாக இந்திய மீனவர்களின் குழப்பங்களுக்கும் நிரந்தமான முடிவு பெற்று தருவதாகவும் ராதாகிருஷ்னன் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq3.html

Geen opmerkingen:

Een reactie posten