தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

அமைச்சர்களுக்கு எத்தனோல் அனுமதிப் பத்திரம் இருக்கிறது: மைத்திரிபால



வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 09:54.42 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பிரதிநிதிகளின் கருத்தறிதல் கூட்டமொன்று இன்று ஞாயிறு முற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கருத்தறியும் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே வவுனியா மாவட்டத்தில் இன்று இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட மாகாணசபை உறுப்பினர்களும், பிரதேசசபைத் தலைவர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் தீர்மானம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு அவர்களின் கருத்துக்களும் அறியப்பட்டது.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு முடிவினை எடுப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq4.html
நகைக்கடையில் ஆயுததாரிகள் கைவரிசை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 10:08.10 AM GMT ]
ஹோமாகம பிரதேசத்திலுள்ள தங்க நகைக்கடை ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த நால்வரால் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது
.இன்று காலை இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் கொள்ளையர்களும் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq5.html

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சால் மாங்குளத்தில் கோழிக் குஞ்சுகள் விநியோகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 10:37.38 AM GMT ]
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது குடும்ப வருமானத்தை உயர்த்தும் நோக்கிலும், போசாக்கு நிறைந்த முட்டையை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் நோக்குடனுமே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாகவே மாங்குளத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாங்குளத்தில் அமைந்துள்ள அவரது இணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தார்.
உள்ளூர்க் கோழிகளுடன் நல்லினக் கோழிகளை இனங்கலந்து உருவாக்கப்பட்ட புதிய ரகமான கொல்லைப்புறக் கோழிக்குஞ்சுகளே இவ்வாறு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இக்கொல்லைப்புறக் கோழிக்குஞ்சுகள் சாதாரண உள்ளர்க் கோழிகளை விடக் கூடுதல் எடையைக் கொண்டதாக வளரக் கூடியவை என்பதோடு, உள்ளூர்க் கோழிகளைவிடக் கூடுதலான முட்டைகளையும் இடக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு, நல்லினக் கோழிகளைப்போல இவற்றைக் கூடுகளில் அடைத்து வளர்க்கவேண்டிய அவசியமோ, கோழிகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் உணவை வாங்கிப் போடவேண்டிய அவசியமோ இல்லாததால், இக் கொல்லைப்புறக் கோழிகள் பயனாளிகளுக்குக் கூடுதல் இலாபம் தரவல்லவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி. வசீகரன், முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் சி.கிரிஜகலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq6.html

மட்டக்களப்பு வாசிகளுக்கு மகிந்த ஜனநாயகத்தை கொடுக்கும் விதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 10:48.58 AM GMT ]
மட்டக்களப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்திற்கு வந்த கெவிலியாமடு கிராமத்தை சேர்ந்த மக்களை பொலிஸார் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த மக்கள் தமக்கு நாட்டில் வாக்குறுரிமை வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
நிராயுத பணிகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் நிர்வாணாப்படுத்தி தாக்கியுள்ளனர். இதனால் 12 காயமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajq7.html
கிழக்கு மக்களுக்கு சகலமும் கொடுக்கப்பட்டது: ஜனாதிபதி- தேர்தல் குறித்து 350 முறைப்பாடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 11:07.29 AM GMT ]
கிழக்கு மாகாண மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுத்ததாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பில்லியன் கணக்கல் பணத்தை ஒதுக்கீடு செய்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டேன். வடக்கில் இருந்து தனியாக பிரிந்த கிழக்கு வேண்டும் எனக் கேட்டனர்.
நாங்கள் உங்களுக்கு தேவையான சகலவற்றையும் கொடுத்தோம். அரச சேவையில் 180 நாட்களை பூர்த்தி செய்த சகலருக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நான் தீர்மானித்துள்ளேன்.
நீங்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளை பற்றி சிந்தியுங்கள். அவர்கள் நாட்டின் எதிர்கால வளங்கள். அவர்களுக்கு சரியான பாதையை கற்றுக்கொடுக்க எங்களுக்கு சந்தர்ப்பத்தை தாருங்கள்.
என்னை நீங்கள நம்பலாம். நான் எப்போதும் உங்களை பாதுகாப்பேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
தேர்தல் குறித்து 350 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 30 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பதிவாகியுள்ளன.
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை குறித்து 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.
இவற்றில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமாக 54 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 26 முறைப்பாடுகளும் கண்டி மாவட்டத்தில் 20 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்களை அனவசியமாக பயன்படுத்துதல், அரசாங்க அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துதல், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பதவி மாற்றம் மற்றும் பதவி உயர்வு, சட்டத்தை மீறி தேர்தல் காரியாலயங்கள் ஆரம்பித்தல் போன்ற அனைத்து காரியங்கள் குறித்தும் முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajry.html
அமைச்சர்களுக்கு எத்தனோல் அனுமதிப் பத்திரம் இருக்கிறது: மைத்திரிபால
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 11:10.02 AM GMT ]
அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு எத்தனோல் மதுசார அனுமதிப் பத்திரங்கள் இருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திகண பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அபிவிருத்தியில் ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றன. மூன்றில் இரண்டு வீத பணத்தை மோசடி ஆட்சியாளர்கள் பெறுகின்றனர்.
மக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் சிறுவர், துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை, கொலை என குற்றச் செயல்கள் அதிகரித்தன.
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களுக்கு சாராயம் தயாரிக்கும் எத்தனோல் மதுசார அனுமதிப்பத்திரம் இருக்கின்றது.
சுமார் 100 லட்சம் மக்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு, இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் மூலம் எந்த வழிக்காட்டல்களும் வழங்கப்படுவதில்லை.
கிராமத்து இளைஞர்களுக்கு எதிர்காலம் நாளை, ராஜபக்ஷ குடும்ப பிள்ளைகளுக்கு கடந்த 10 வருடங்களாக எதிர்காலம் இன்று எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajrz.html

Geen opmerkingen:

Een reactie posten