தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

பாரதி ராஜாவின் வருகை இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நோக்கமா?



மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு மைத்திரிக்கு!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 11:33.43 AM GMT ]
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கான மலையக மக்கள் முன்னணியின் தலைவர்களிடம் ஒரு செயற்குழு சட்டம் ஒன்று இன்று ஹட்டனில் இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது வே.இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மலையக மக்களுக்கு தனி வீடுகள் அமைக்க வேண்டும் என நாங்கள் கேட்டபோது, மலையக மக்களுக்கு மாடி வீடு தான் அமைக்க ஏற்பாடு செய்ய முடியும் தனி தனி காணிகள் கொடுத்து வீடுகள் அமைக்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறினார்.
இதனையடுத்து நாங்கள் எதிரணிக்கு சென்று மலையக மக்களுக்கு தனி தனி வீடுகள் தருவதாக இருந்தால் மட்டுமே நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்பதை பற்றி தீர்மானம் எடுக்க முடியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தபோது அதற்கு அவர் மலையக மக்களுக்கு தனி தனி வீடுகள் அமைப்பதற்கு நான் உறுதியளிக்கின்றேன்.
அதுமட்டுமில்லாமல், மலையகத்தில் தேசிய பாடசாலை அமைத்து மலையக பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்யவுள்ளதாகவும், இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாகவும் உங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து தருவதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்தே அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க தீர்மானம் எடுத்தோம்.
நாங்கள் மட்டுமில்லை சிங்கள, முஸ்லிம் மக்கள் மற்றும் கூட்டமைப்பினர் ஆகியோரும் எதிர்ப்பார்ப்பது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வேண்டுமென்பதே.
நாங்கள் எடுத்த இந்த தீர்மானத்திற்கு எதிராக சில பேர் வெளியேறி செல்லலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.
மலையக மக்கள் முன்னணி கட்சிக்கு ஒரு முடிவு இருக்கின்றது. அந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவு மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிப்பது என்ற முடிவே ஆகும்.
எனவே மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajr0.html

பாரதி ராஜாவின் வருகை இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நோக்கமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 11:34.38 AM GMT ]
யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதி முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார் இயக்குனர் இமையம்.
பாரதி ராஜாவின் வருகை இலங்கை அரசங்கத்தின் அரசியல் நோக்கமா என பல கேள்விகளை உருவாக்கியுள்ளது.
மஹிந்தவின் லைக்கா நிறுவனம் படம் எடுத்தால் அது துரோகம் என்று ஆர்ப்பாட்டம் எடுக்கும் இந்திய அரசியல் வாதிகள் இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஏன் அமைதிகாக்கின்றனர்.
இலங்கைக்கு அசின் வந்த போதும் வேறு திரையுலகத்தினர் வர முயன்ற போதும் தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பின, ஆனால் இயக்குனர் இமயம் வந்த போது அவ்வாறான எதிர்ப்புக்களை காண முடியவில்லை.
காரணம் எதுவாக இருக்கும்.? இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதோ ஒரு விதத்தில் நன்மைகள் வரும்போதெல்லாம் இந்தியாவின் தலையீட்டால் அதுவே மக்களுக்கு பாரிய எதிரியாக மாறுகின்றது.
அது போன்று கொத்துக்கணக்காக பொதுமக்கள் மரணமான போது வருவதற்கு யாருக்கும் முடியவில்லை.
இந்த வருகை தமிழ் மக்களுக்கு எந்தவிதத்தில் தீமை அளிக்கப் போகின்றது என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்த வருகை கூட அரசியல் நோக்கமாகவே இருக்கும் தமிழன் தலை நிமிர இந்தியா ஒருபோதும் இடமளிக்காது.
எம்மவர்களை வைத்து வெறும் செய்திகளுக்காவே இந்திய அரசியல் வாதிகள் பாவிக்கின்றார்களே தவிர இவற்றில் உண்மை ஒன்றும் இல்லை வடமாகாண சபை தேர்தலில் ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் சார்பாக வேட்பாளராக களமிறங்கியவர் அழைப்பின் பெயரிலே வருகை தந்துள்ளார்.
இந்த விடயம் எல்லாம் அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது தெரிந்தும் இயக்குனர் சிகரம் என்பதால் அடங்கியுள்ளார்களா? பாதிப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமே!
http://www.tamilwin.com/show-RUmszCRVKajr1.html

Geen opmerkingen:

Een reactie posten