தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

தாக்குதல் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்கத் தவறும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்!– அனுரகுமார திஸாநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:21.56 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸää மின் கம்பங்களில் தொங்குவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தம்மை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிப்பார்கள் என ஜனாதிபதி பிரச்சாரம் செய்து வருகின்றார்.
எனினும், ஜனாதிபதி சகல மின்கம்பங்களிலுமே தொங்குகின்றார்.
இன்று அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கட்அவுட்களை மின் கம்பங்களில் எவ்வாறு தொங்கவிடுவது என்பது பற்றியே கணக்குப் பார்த்து வருகின்றன.
ராஜபக்ச குடும்பத்திற்கு இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமானது.
தமது குடும்பத்தையும் சகாக்களையும் பாதுகாத்துக்கொள்ள அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
அனைத்து இன மக்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து நாட்டில் நல்லாட்சியை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முயற்சித்தால் 24 மணித்தியாலயத்தில் ஜே.வி.பி கட்சி ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் என அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagpz.html
ஐயோ சிறிசேன படத்தின் கதாநாயகன் மைத்திரிபால கதாநாயகி சந்திரிக்கா: ரோஹித்த அபேகுணவர்தன
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:28.15 AM GMT ]
அவளின் பகை திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஐயோ சிறிசேன என்ற படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது எனவும் அதில் பிரதான கதாநாயகனாக மைத்திரிபால சிறிசேனவும் கதாநாயகியாக சந்திரிக்காவும் நடித்து வருவதாக அமைச்சர் ரோஹித்த அபேகுவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை ஹினடியாங்கல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
படத்தின் இயக்குநராக ரணில் விக்ரமசிங்க பணியாற்றி வருவதுடன் அவமங்கள, டொக்டர் உட்பட பலர் அதில் நடித்து வருகின்றனர்.
மைத்திரிபாலவின் ஆடை இந்தியாவின் ஆடை, கொள்கை சிங்கப்பூரின் கொள்கை, எதிர்காலத்தில் ஒபாமாவின் காற்சட்டை அணிந்து கொண்டு இவர்கள் தம்மை அமெரிக்கர்கள் என்றும் கூறிக்கொள்வர்.
இப்படியான பொம்மைகள் நாட்டின் ஜனாதிபதி பதவியை பெற முயற்சித்து வருகின்றனர். அது எப்போதும் நடக்க போவதில்லை.
இப்படியான சூழ்ச்சிகள் இன்று நேற்று நடக்கவில்லை. புத்த பகவானுக்கு தேவ்தத்தயா இருந்தார். யேசுக்கு யூதாஸ் இருந்தார். அவ்வாறு மகிந்தவுக்கு தற்போது மைத்திரிபால சிறிசேன.
சிறிசேனவின் பெயரை கூறினால் பௌத்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். ரொட்டி சாப்பிட்டு விட்டு யேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் பெயரை கூறினால் மக்கள் சபிப்பார்கள். மைத்திரிபால அப்பம் சாப்பிட்டு விட்டே காட்டிக்கொடுத்தார் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp0.html
தண்டப் பணம் கட்டினாலும் குமார் குணரத்னம் நாட்டுக்குள் வரமுடியாது: அரச அதிகாரி
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:29.03 AM GMT ]
இந்த நாட்டின் சட்டங்களை மீறி வெளிநாட்டில் தங்கியுள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் விசாவுக்கான தண்டப் பணத்தைக் கட்டினாலும் அவருக்கு இந்நாட்டுக்குள் வர இடமளிக்கப்பட மாட்டாது என அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்ற ஒருவராவார். பல்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்படும் இவருக்கு அவுஸ்திரேலிய அரசு அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.
இவருக்கு நாட்டின் உள்விவகாரங்களில் ஈடுபட முடியாது. அத்துடன், இலங்கை இராணுவம் வடக்கில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தில் வைத்து இவர் அறிவித்தல்களையும் விடுத்துள்ளார் என சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் அறிவித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குமார் குணரட்னம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைய முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்வார் என முன்னணி சோசலிச கட்சி அறிவித்துள்ளது.
அத்துடன், வீசா காலம் முடிவடைந்து தொடர்ந்தும் நாட்டில் தங்கியிருந்தமைக்கான தண்டப் பணம் நேற்று இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் செலுத்தப்பட்டதாகவும் அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp1.html
தாக்குதல் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்கத் தவறும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:43.44 AM GMT ]
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்ட தாக்குதல் சம்பவம் குறித்து வாக்கு மூலம் அளிக்கத் தவறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
வட மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விமர்சனம் செய்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எட்டு பேர் பொலிஸ் நிலையத்தில் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக வாக்கு மூலம் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்,  மாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன், சர்வேஸ்வரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன், காரைநகர் பிரதேச சபையின் தலைவர் ஆனைமுகன் உள்ளிட்டோருக்கு நேற்று முன்தினம் வாக்கு மூலம் அளிக்குமாறு யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
இதில் சிவாஜிலிங்கம், ஆனைமுகன் மற்றும் சுகிர்தன் ஆகியோர் மட்டுமே வாக்கு மூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனையவர்கள் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக வாக்கு மூலம் அளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் அழைப்பு கிடைக்காதநிலையில் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் சிவாஜிலிங்கம் மற்றும் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகியயோர் மட்டும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து அனைவரும் இணைந்து எதிர்வரும் 12ம் திகதி வருமாறே பொலிஸார் கூறியதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp2.html

Geen opmerkingen:

Een reactie posten