தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

மஹிந்தவின் பிரச்சாரத்திற்காக மோடியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த தொழில்நுட்ப வல்லுநர் நியமிப்பு?

அதிக மழை காரணமாக மலையக ரயில் சேவைகள் இரத்து
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 05:34.43 AM GMT ]
மலையக ரயில் பாதையுடான அனைத்து ரயில் சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கண்டியிலிருந்து கொழும்பு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagoz.html
பிரித்தானிய சுற்றுலாப் பயணியிடம் கொள்ளை: மிரிஸ்ஸவில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 05:47.34 AM GMT ]
பிரித்தானிய சுற்றுலாப் பயணியான பெண்ணொருவரிடம் விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் மிரிஸ்ஸ பிரதேசத்தில் நடந்துள்ளது. குறித்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
மிரிஸ்ஸ பிரதேசத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், உடுபில கடற்கரையில் நேற்றி்ரவு  நடைபெற்ற பீச் பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்த பெண் தனது கைப்பையை சன் பெட் ஒன்றில் வைத்து விட்டு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதன் பின்னர் திரும்பி செல்லும் போது கைப்பை எடுத்து பார்த்துள்ளார். அதில் வைக்கப்பட்டிருந்த 24 ஆயிரம் ரூபா பணம், ஐபோன், ஐபேட் என்பன காணாமல் போயிருந்தன.
இது குறித்து அவர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுவரை எவரும் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago0.html
பைஸர் முஸ்தபா சிங்கப்பூர் பயணம்: நாடு திரும்பியதும் முக்கிய அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 06:03.33 AM GMT ]
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று மதியம் 12.45 அளவில் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
நாடு திரும்பியதும் அவர் முக்கிய தீர்மானம் ஒன்று குறித்து அறிவிக்க உள்ளார்.
பொதுபல சேனா, ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தை ஆதரித்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பைஸர் முஸ்தபா ஏற்கனவே கூறியிருந்தார்.
அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இன்று காலை 9.50 அளவில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று அதிகாலை 12.51 அளவில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago1.html
பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியமர முன் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: தண்டாயுதபாணி
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 06:41.49 AM GMT ]
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பும் போது எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன் கூட்டியே கவனத்திற்கெடுத்து அதற்குரிய ஏற்பாடுகளை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுக்கின்றார்.
தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக தமது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள மூதூர் மற்றும் வெருகல் பிரதேசங்களில் உள்ள மக்களை பார்வையிட்டு அவர்களுடைய தேவைகள் தோடர்பாக விசாரிக்க சென்ற கிழக்கு மாகாணசபையின் எதிர் கட்சி தலைவர் உற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவொன்று சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் எதிர் கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெள்ளம் வழிந்தோடிய பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உணவு கழிப்பறை உட்பட்ட சுகாதார தேவைகள், வெள்ளநீர் உட்புகுந்தமையால் வீடுகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைத் திருத்தம் செய்தல், பிள்ளைகளின் புத்தகங்கள் உட்பட்ட கல்வி உபகரணங்களின் தேவை, போன்ற  பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். 
இப்பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும். 
பொது இடங்களில் தங்கியுள்ளவர்கள மக்களுக்கு அவர்களுடைய பிரதேச செயலக பிரிவுகளினால் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் வெள்ளநீர் வடிந்தோடிய பின் மக்கள் தமது வீடுகளுக்கு செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பார்கள் எனவும் இதற்கான முன்னாயத்தங்களை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago3.html
அவசர விபத்துக்களில் காயமடைந்த 231 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 06:42.26 AM GMT ]
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நடந்த திடீர் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 231 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வாகன விபத்து காரணமாக 76 பேரும் வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 41 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சை பிரிவின் அதிகாரி புஷ்பா ரம்யானி த சொய்சா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago4.html
எதிரணியில் இணைந்து சிலர் மீண்டும் மகிந்த தரப்புக்கு ஆதரவு
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:15.44 AM GMT ]
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து விலகி முன்னாள் பிரதியமைச்சர் பீ. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
சங்கத்தின் அரசியல் முன்னணியான தொழிலாளர் விடுதலை முன்னணியின் உப தலைவர் எம்.ஆர்.ரி. ஐயாத்துரை, பொதுச் செயலாளர் சோலைமலை தேவதாஸ், நிதிச் செயலாளர் கே. சந்திரமோகன், உதவிச் செயலாளர் ஏ. அன்டன், உப தலைவர் பழனிவேல் பிரகாஷ் ஆகியோர் இவ்வாறு மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago6.html
சாதாரண தரம் கணித பாடத்தில் சித்தியெய்தாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்!– பந்துல குணவர்தன
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:16.08 AM GMT ]
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கணித பாடத்தில் சித்தியெய்தாத பலர் அரசியலில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
கணித பாடத்தில் சித்தியடையாத எத்தனை பேர் நாட்டை வழிநடத்த போட்டியிடுகின்றார்கள் என்பதனை நாம் ஆராய வேண்டும்.
பொலனறுவையில் பிறந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கணிதத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கியிருக்க வேண்டும்.
எனினும், கணித பாடத்தில் சித்தியடையாதவர்கள் பற்றி மைத்திரிபால சிறிசேன எதனையும் குறிப்பிடவில்லை.
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறையை தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெளிவாக புலப்படுகின்றது என பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago7.html
மஹிந்தவின் பிரச்சாரத்திற்காக மோடியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த தொழில்நுட்ப வல்லுநர் நியமிப்பு?
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:21.07 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அர்விந் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அர்விந் குப்தா கடந்த நவம்பரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவித்துள்ள புதுடில்லி வட்டாரங்கள், அவர் தனிப்பட்ட ரீதியில் இலங்கை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவலாம் என குறிப்பிட்டுள்ளன.
எனினும் அர்விந் குப்தா இந்தத் தகவலை நிராகரித்துள்ளார். தான் தேவையற்ற விதத்தில் சர்ச்சைக்குள் இழுக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ள குப்தா, இந்த தகவல்களால் தான் குழப்பமடைந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த மறுத்துள்ளதுடன், ஜனாதிபதியின் பிரச்சாரத்திற்காக உள்நாட்டவர்களும், வெளிநாட்டாவர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் சுயவிருப்பத்தின்பேரில் பணியாற்றுகின்றனர் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagpy.html

Geen opmerkingen:

Een reactie posten