தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்

யாழில் மட்டுமே இடம்பெற்ற அதிசயம்: அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 07:54.12 AM GMT ]
புவியியல் ரீதியாக பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ். மாவட்டமே விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது யாழில் மட்டுமே இந்த வருடம் அதிசயிக்கத்தக்க விடயம் ஒன்றும் இடம்பெற்றது.
அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரட்சி, வெள்ளம் ஆகிய இரண்டு அனர்த்தங்களும் இடம்பெற்று ஒருபுறம் வரட்சி நிவாரணமும் மறுபுறம், வெள்ள நிவாரணம் போன்ற இரண்டையும் யாழ். மாவட்டமே பெற்றுக் கொண்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்று காலை 9மணியளவில் யாழ்.மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
ஆழிப்பேரலையின் காரணமாக மக்கள் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதில் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரகடனப்படுத்தப்பட்ட தினமாக இன்றைய தேசிய பாதுகாப்பு தினம் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் அகில இலங்கை ரீதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவரை நினைவுகூருகின்றனர்.
எதிர்காலத்தில் இயற்கை அழிவிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் எத்தகைய நடவடிக்கையினை மேற்கொண்டு இருக்கின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இதேவேளை இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக 3 வருடங்களாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்று விசேடமாக பள்ளத்தோட்டம், இராஜகிராமம் ஆகிய வடிகால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இயற்கை அனர்த்தத்திலிருந்து எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp3.html
மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 08:02.07 AM GMT ]
மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் இந்த இடமாற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
பாணந்துறைää பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
பாணந்துறை பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.கே.டி. பலிஸ்கார பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி. பிரேமதிலக்க பொலிஸ் வைத்திய சேவை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிரிவிற்குப் பொறுப்பாக கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு.ஏ. அத்தபத்து கந்தளாய் சேறுநுவர ஆகிய பிரிவுகளுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கு இந்த இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தேர்தல் காலத்தில் இவ்வாறு அரச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
என்ன காரணத்திற்காக இவ்வாறு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp4.html
மைத்திரிபாலவை கைது செய்ய திட்டமிடும் ராஜபக்ஷவினர்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 08:03.06 AM GMT ]
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் வழங்கிய மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்ய ராஜபக்ஷவினர் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் வைத்து புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளிடம் இருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான டொலர், சுவிஸ் பிராங், யூரோ நாணயங்கள் மைத்திரிபாலவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவரது மகனது காதலியின் தந்தை தனது நண்பர் ஊடாக தரிந்து சந்திரவாச என்பவரிடம் இந்த பணத்தை கொடுத்து வைத்துள்ளதாகவும் கதை பின்னப்பட்டுள்ளது.
தரிந்து சந்திரவாச என்பவர் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் ராஜபக்ஷவின் கதை புனைந்துள்ளனர்.
தரிந்து சந்திரவாச என்பவர் ராஜபக்ஷவினருக்கு நெருக்கமானவர். அவரிடம் ராஜபக்ஷவினரே வெளிநாட்டு பணத்தை கொடுத்துள்ளனர். எனினும் வெளிநாட்டு பணத்துடன் சந்திரவாச என்பவர் கைது செய்யப்பட்டதாக கூறி, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
இந்த பொய்யான நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்த ராஜபக்ஷவினரின் ஆதரவாளரான புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சமன் திஸாநாயக்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரிந்து சந்திரவாச கடந்த 22 ஆம் திகதி இரவு 8.30 அளவில் இந்த பணத்தை கல்கிஸ்சை நீதவானிடம் ஒப்படைத்துள்ளார்.
ராஜபக்ஷவினருக்கு ஆதரவான நீதிபதிகள் குழுவின் முக்கியஸ்தரான ரங்கஜீவ விமலசேனவிடம் இந்த பணத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சந்திரவாச அதனை பதில் நீதவான் ஒருவர் முன் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து அனைவரும் இணைந்து பொய்யான வாக்குமூலம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவின் மகனது காதலியின் தந்தையுடைய நண்பர் மூலம் தனக்கு இந்த பணம் கிடைத்ததாக சந்திரவாச வாக்குமூலத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னர் விமல் வீரவன்ஸவை பயன்படுத்தி பெரும் சேறுபூசும் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவும் வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp5.html

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 08:17.37 AM GMT ]
சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாடுமுழுவதிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இன்றைய தினம் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடம் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்திலும் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலகத்திலில் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஜனாதிபதியின் செயலக பிரதானி காமினி செனரத், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp6.html

ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 08:30.38 AM GMT ]
பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் ஒரு காலை வேளையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் திளைத்து ஓய்ந்து உறங்கியிருந்த எம் உறவுகளை கடல் காவுகொண்டது.
ஒன்றா இரண்டா கணப்பொழுதுகளில் மணல்வீடுகள் மண்ணில் கரைவது போவதுபோல எங்கிருந்தோ துரோகமாய் எதிர்பார்;க்காத பொழுதில் எழுந்த ஆழிப்பேரலை எம் ஆயிரக்கணக்காக உயிர்களை வாரிசுருட்டி வதை செய்தது.
அழகெனவும் எம் அற்புத உறவெனவும் செல்வம்  அள்ளித்தரும் அன்னையெனவும் அதுவரை எம் உறவுகள் நம்பியிருந்த கடல் செய்த மாபெரும் கொடுரத்தால் சின்னாபின்னப்பட்டு போனது எம் கடலோர மக்களின் அழகிய வாழ்வு.
கடந்த பத்தாண்டுகளின் முன் இதே நாளில் இப்படியொரு காலையில் கடலோரம் ஓலங்களின்  இடமாக அவலங்களின் அடையாளமாக அநாதைகளை உருவாக்கிய அதிர்ச்சி நிலமாக எழிலிழந்து கிடந்தது.
பத்தாண்டுகள் கடந்துபோயினும் அந்த நினைவுகளில் இருக்கும் ஈரம் காயவில்லை. அழுகை ஓயவில்லை. நிர்க்கதியின் ஏக்கம் தீரவில்லை.
ஆழிப்பேரலை காவிச்சென்ற எம் கண்மணிகளை நினைத்து இன்று மக்கள் திரண்டு மலர் தூவி நினைவிடங்களுக்கு மாலையிட்டு தங்கள் கண்ணீர் காணிக்கைகளை செலுத்தினர்.
இன்று வடமராட்சி கிழக்கு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் கிராம அலுவலர் தவராசா தலைமையில் வணக்க  நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பொது நினைவுத்தூபிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
அத்துடன் வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந் பொதுஅமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagp7.html

Geen opmerkingen:

Een reactie posten