தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

அந்நிய இராணுவ பிரசன்னங்களை தவிர்க்க வேண்டும்!- அஜித் டோவால்!!

அச்சம் காரணமாக கிழக்கு மாகாணசபை ஒத்தி வைப்பு! செங்கோலை தூக்கி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 03:12.47 PM GMT ]
கிழக்கு மாகாணசபையின் இன்றைய நடடிக்கைகளை பிற்போட்டமைக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தமது கடும் ஆட்சேபனையினை தெரிவித்ததுடன் சபாநாயகரை மறித்து செங்கோலை தூக்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணசபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வியை தழுவும் நிலையிலேயே திடீரென இன்று இரவு சபை நடவடிக்கைகள் நாளைக்கு பிற்போடப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று காலை 9.00மணிக்கு தொடங்கி கோரம் போதுமானது இல்லையென கூறி சபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் முற்பகல் 10.15 மணியளவில் ஆரம்பமாகியது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் மாத்திரமே சபைக்கு சமூகமளித்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியதால், சபை அமர்வு சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை அமர்வு மீண்டும் ஆரம்பமாகியபோது, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளித்துள்ள நிலையில், கிழக்கு மாகாணசபை அமர்வு நடைபெற்றது.
இன்று காலை கிழக்கு மாகாணசபையினால் அடுத்த ஆண்டுக்கான பட்ஜட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதம் நடைபெற்றதுடன் இன்றிரவு 8.00 மணிவரை சபையினை நடத்துவது எனவும் பின்னர் இரவே வாக்கெடுப்பு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இன்றிரவு 7.00மணியளவில் ஆளும் தரப்பில் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளில் 15 உறுப்பினர்களும் சபையில் இருந்தனர்.
இந்த நிலையில் இடையில் வாக்கெடுப்பினை நடாத்தாது சபாநாயகர் திடிரென சபையினை ஒத்திவைத்தார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணசபையின் இந்த ஆண்டு பட்ஜட் தோற்கடிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கையினை சபாநாயகர் மேற்கொண்டார்.
இதன்போது ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
இதேவேளை சபாநாயகர் சபையினை ஒத்திவைத்து விட்டு கீழ் இறங்கி வரும் போது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன் செங்கோலையும் தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZkpy.html
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்!
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 03:28.03 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பது அவசியமென இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டம் மற்றும் சொத்துகள் மற்றும் உடமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை அளிப்பதென்பது அவசியம் என கொழும்பில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே சொத்து விவர அறிக்கை ஒன்றை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்தாலும், கடந்த காலங்களில் இந்த முறைமை கடைப்பிடிக்கப்படவோ, வலியுறுத்தப்படவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வேட்பாளர் தனது சொத்து விவரங்களை தெரிவிக்க மறுத்தால் அது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்றும், அப்படி விவரம் அளிக்க மறுக்கும் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் பத்திரன குறிப்பிட்டார்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை அளிக்கிறார்களா என்பதை தாங்கள் அவதானிக்கப் போவதாகவும், அப்படி அளிக்கத் தவறுகிற பட்சத்தில் தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் மா அதிபரும்  சட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் தவறுகிற பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதென அஜித் பத்திரன கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZkpz.html
அந்நிய இராணுவ பிரசன்னங்களை தவிர்க்க வேண்டும்!- அஜித் டோவால்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 03:30.52 PM GMT ]
இந்து சமுத்திரத்தை அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை நிலைபெற வேண்டும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தெரிவித்துள்ளார்.
காலி கலந்துரையாடல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன்பொருட்டு இலங்கை வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
வெளிநாட்டவரின் அநாவசிய இராணுவ பிரசன்னங்கள் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் குறிப்பிட்டார்.
1971ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் யோசனைப்படி, இந்து சமுத்திர பிரதேசம் ஒரு சமாதான பிரதேசமாகும்.
எனவே இந்தப் பிராந்தியத்தில் அந்நிய இராணுவ பிரசன்னங்ளுக்கு இடமளிக்கக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தியா, சுமார் 5000 ஆயிரம் வருடங்களாக பிராந்தியத்தில் பலமிக்க நாடாக இருந்து வருகிறது. எனினும் எந்த நாட்டுக்கு எதிராகவும் அது ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் டோவால் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கடற்கொள்ளையர், போதைவஸ்து கட்டுப்பாடு மனித கடத்தல்கள் என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையுடனும், மாலைதீவுடனும் சிறந்த ஒத்துழைப்பை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்த கலந்துரையாடலில், 36 நாடுகளை சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZkp0.html

Geen opmerkingen:

Een reactie posten