[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 03:49.11 PM GMT ]
இந்தநிலையிலேயே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான நிக்கலஸ் பெர்ணான்டோ என்பவரே மரணமானவராவார்.
இந்த சம்பவம் நவம்பர் 22ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
முதல் நாள் இரவு 7 மணியில் இருந்தே இவருக்கு கடுமையான நெஞ்சுவலி இருந்ததாக கூறப்பட்ட போதும் சிறைக்காவலர் அதனை பொருட்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இலங்கையர் எதற்காக சிறைவைக்கப்பட்டிருந்தார் என்ற தகவலை ஜப்பானிய ஊடகங்கள் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZkp1.html
தமிழர்களின் சுபீட்சத்திற்கான பாதைகளை திறந்துவிடும் நேரமிது: சி. பாஸ்க்கரா
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 04:09.09 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலை பாதையில் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் பத்திரிகையாளர்களும் நியாயமான தமது பயணத்தில் செல்வார்களால் இருவர்களது பயணத்தையும், பிறழ்வில்லாத இலட்சிய பாதை, பொறுப்பெடுத்துக் கொள்ளல், சவாலை சமாளித்தல் எனும் மூன்று அத்தியாயத்தில் பிரித்து பார்க்க முடியும்.
இலட்சியப்பாதை எனும்போது எப்பாத்திரத்தை கையிலெடுத்து ஓர் அரசியல்வாதி தனது பயணத்தை தொடங்குகிறானோ அதே பாதையில் இறுதிவரையில் காலத்திற்கேற்ற விதத்தில் சோரம் போகாமலும், பாதை மாறாமலும் பயணிக்க வேண்டும்.
அதே போல்தான் பத்திரிகையாசிரியரும் தனது தொடக்க பாதையில் இருந்து அதே பாதையில் சோடை போகாமல் பயணிக்க வேண்டும்.
பொறுப்பெடுத்துக் கொள்ளல் எனும் போது ஓர் அரசியல்வாதி தனது பயணத்தின் தனது கொள்கை பரம்பலையும் மக்கள் ஆதரவை எடுத்து கொள்ளவும் நியாயமான வழிகளில் பயணிக்கவும் தமது நுணுக்கங்களையும் வளர்ச்சி மக்கள் விடிவு பாதையை நோக்கியதாக காய்நகர்வுகள் அமைய வேண்டும்.
இதே போல் பத்திரிகையாளனும் தனது மக்கள் விரும்பும் முக்கிய செய்திகளை பொறுப்புடன் போட்டியுடன் ஆனால் பொறாமை இன்றி கவனம் செலுத்தி செய்தியில் வெல்ல வேண்டும். சவாலான செய்திகளை சரியாக எடுத்து மக்கள் முன் நெய்ய வேண்டும்.
சவாலை சமாளித்தல் எனும் போது, போட்டித்தான் உங்களைச் சிறந்தவராக்கியது நீங்கள் சிறப்புடன் செயற்படுவதற்கான ஊக்கங்களையும், அது வழங்குகிறது.
போட்டியில்லையேல் இருப்பதைக் கொண்டு திருப்தியடைகிறவராகி விடுவீர்கள். இங்கு அரசியல்வாதிகளுக்கும், பத்திரிகையாளனுக்கும் ஒரே பார்வைதான்.
போட்டி நிறைந்த உலகின் உச்ச விடையே அரசியல்வாதிகளின் இறப்பும் பத்திரிகையாளர்களின் இறப்பும் சவாலை சமாளிக்க முனையும் போதே ஏற்படும் விபரீதங்கள்.
எதையும் நடைமுறைப்படுத்த முடியும் என்று தீவிரமாய் நம்புங்கள் அதுவே வெற்றியைத் தேடித்தரும்.
பொன்மொழிக்கேற்ப செயற்படும் அரசியல் வாதிகள் தமது பாதையில் வெற்றி பெற்றவர்களாகவும் பிரகாசிப்பவர்களாகவும் உள்ளனர். அரசியல் பரம்பலில் காந்தியடிகளையும் தந்தை செல்வாவையும் குறிப்பிடலாம்.
அண்மையில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயற்பாடானது கேலிக்கூத்தாகவும் பதவிக்கும் பணத்திற்கும் சோடை போன செயற்பாடாகவே காணமுடிகிறது.
ஏனெனில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இறந்த பல இலட்சக்கணக்கான மக்களின் இறப்பை நியாயப்படுத்தி ஜனாதிபதிக்கு அன்று வக்காளத்து வாங்கிய அமைச்சர் இன்று அதே மக்களிடம் ஜனதிபதிக்காக வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்.
அதுவும் மக்களை பிரித்தாளும் முறையை பயன்படுத்தி ஒற்றுமையாக வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒற்றுமையாக வாழும் இக்காலகட்டத்தில் மேலும் மேலும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய இந்நேரத்தில் மலையக மக்களை பிரித்தாளும் நோக்குடன் செயற்படும் இவர்கள் இலச்சியப் பாதை அற்றவர்கள் தமது இருப்புக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.
இதே அமைச்சர் செய்ததை இவரின் பூட்டன் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயர் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் இழப்பையே சிலசமயம் நிறுத்தி வைத்திருப்பார்.
தனது அரசியல் சாணக்கியத்தால் இல்லையேல் மீறி நடைபெற்றிருப்பின் உடன் கண்டித்து மக்கள் விடுதலைக்கு உதவியிருப்பார். அவர் எங்கே இவர்கள் எங்கே?
மலையக மக்கள் 200 வருடங்களாக இந்தியாவில் இருந்து வந்த நிலையிலேயே வாழ்கிறார்கள். அவர்கள் மண்சரிவில் கடந்த மாதத்திற்கு முன் இன்னலுற்று இருக்கும் போது அவர்களை சென்று பார்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற வடக்கு முதல்வர், மாகாண சபை உறுப்பினர்கள் பார்த்து ஆறுதல் கூறி உதவி செய்வதை கண்டிக்க முனைந்தது ஏற்புடையதல்ல.
அவர்கள் நாம் தமிழர் என்றதையே மறந்தவர்கள் இன்று அகதிகளுக்கு நிரந்தர வீடு கொடுக்காமையும் 2005 ஆண்டு மலையக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சை அமைச்சரவை கூட்டத்தில் உருவாக்க முடியாதவர்களும் இன்று முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நியாயப்படுத்திவிட்டு அவர்களிடம் வாக்கு கேட்பதை இலச்சிய பாதை இல்லாதவர்கள் என்று பார்க்கலாம்.
முதல் சூட்டை கொழும்பில் எம்மிடமும் அச்சூடு மாறுமுன் இரண்டாம் சூட்டை வன்னியிலும் பெறுவார்கள் இவர்கள்.
இக்கால கட்டத்திலே எமது தமிழ் மலையக மக்கள் 200 வருடங்கள் வாழ்ந்த நிலையிலிருந்து இன்னும் சில வருடங்களில் தமது நிலையில் இருந்து மாறுவதற்கு ஏற்ற சூழ் நிலையை மண்சரிவில் இறந்து தியாகம் செய்து வாழும் வாழப்போற மக்களின் இலங்கை வாழ் ஏனைய இன மக்களுக்கும் உலகிற்கும் தமது துயரத்தை எடுத்தியம்பியிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இறப்பு எமது அரசியல் இனப்பிரச்சினை தீர்வை எவ்வளவுக்கு வெளிக்கொண்டு வந்ததோ அதற்கு நிகரான தாக்கத்தை மலையக மண்சரிவு மக்களின் தியாக இறப்பு கொண்டு வந்திருக்கின்றது.
இவ்வேளையில் எவ்வித அரசியல் பிறள்வுமின்றி அவர்களின் வாழ்க்கை விடுதலை அடைய தமிழர் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலமிது. இதிலிருந்து அரசியல் கட்சிகள் தொண்டு நிறுவனங்கள் சகல பேதங்களையும் மறந்து செயற்பட வேண்டிய நேரமிது.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZkp2.html
Geen opmerkingen:
Een reactie posten