[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 11:35.10 AM GMT ]
வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் ஷிரோன் பெர்னான்டோ மீதே நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பாக வென்னப்புவ பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிபாலவின் தேர்தல் பிரச்சாரக் கன்னிக்கூட்டம் பொலன்நறுவையில் நேற்று நடைபெற்றது.
அக்கூட்டத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கையில், ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் தாக்கப்பட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko3.html
நாட்டை மேற்குலக காலனியாக மாற்ற சில சக்திகள் முயற்சி: குமுறும் தேசிய சுதந்திர முன்னணி
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 11:53.01 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த முன்ணியின் பேச்சாளரான மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
எதிரணியினரின் இந்த சவாலை தோற்கடிக்க சகல இலங்கையரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இனவாதம் மீண்டும் தலைத்தூக்க இடமளிப்பதன் மூலம் நாட்டை மேற்குலக காலனித்துவ நாடாக மாற்ற சில சக்திகள் முயற்சித்து வருகின்றன.
இந்த சக்திகளை தோற்கடிக்கவும் தேசிய சக்திகளை இரண்டாக பிளவுப்படுத்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் சதித்திட்டத்தை தோற்கடிக்கவும் தேசப்பற்றாளர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் முஸ்ஸாமில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko4.html
இனத்துவேசமாக செயற்படும் கல்முனை மேயர்! சுப்பிரமணியம் பாஸ்கரன் பி.உ
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:38.06 PM GMT ]
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு நான் பூரண திருப்தியுடன் ஆதரவாக வாக்களித்துள்ளேன் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பாஸ்கரன் தெரிவித்தார்.
ஏனெனில் இந்த வரவு செலவுத்திட்டத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரத்திற்கு கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதனை காணக்கூடியதாக இருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை காரைதீவு பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்!
கல்முனை மாநகர சபையில் கடந்த 20.11.2014 அன்று நடைபெற்ற விசேட அமர்வில் மேயர் அவர்கள் உரையாற்றுகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள காரைதீவு, நாவிதன்வெளி, பிரதேச சபையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களை புறக்கணிப்பதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் பங்கீடு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்று நான் அறிந்திருந்தேன்.
ஆனால் முஸ்லிம்களுக்குரிய பங்கீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் ஆட்சியிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், காரைதீவு பிரதேச சபை எதிர்கட்சி தலைவருமான பாயிஸ் அவர்கள் ஆதரவாக வாக்களித்திருக்க மாட்டார். எனவே முஸ்லிம்களுக்குரிய பங்கீடு உரிய முறையில் வழங்கப்படுகிறது என்பதனை இப்பாதீடு நிறைவேற்றமானது சுட்டிக்காட்டியிருக்கிறது.
எனவே கல்முனை மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்த கருத்து முற்றிலும் வேடிக்கையாகவுள்ளது. ஆனால் கல்முனை மாநகர சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக உள்ளது. அவர்களுக்கு அங்கு உரிய முறையில் பங்கீடு வழங்கப்படுகிறதா? என்பதற்கான கேள்வி எங்களிடம் உள்ளது. ஏன் எனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் யாரையுமே நிதிக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதனை ஒரு ஆதாரமாக இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் தமிழ், முஸ்லிம் உறவுகள் இருந்தால் மட்டுமே தமிழ் பேசும் மக்கள் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதனை முஸ்லிம் உறவுகளும் புரிந்து கொள்ள வேண்டும். இதேவேளை கல்முனை மேயர் இனத்துவசத்தினை கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கரையோர மாவட்ட பிரேரணையினை முற்றிலும் எதிர்த்திருந்தார்கள். ஏன் எனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பொறுத்த மட்டில் தமிழர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் சேர்த்த ஒரு தீர்வினையே பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.
இதனை முஸ்லிம் சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானித்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko6.html
ஐ.நா.வில் இலங்கை தன்னை நியாயப்படுத்த பெருமளவு பணத்தை செலவிடுகிறது!- பீரிஸ் கவலை
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:53.51 PM GMT ]
காலியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடந்து உரையாற்றுகையில்,
சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கும் கடற்கொள்ளைக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பல கப்பல்களை கடத்தியுள்ளனர்.
அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பொருட்டு உலகின் எந்த நாடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியையோ அல்லது பயிற்சியையோ வழங்கக் கூடாது.
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்காக நேரத்தையும், பணத்தையும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko7.html
Geen opmerkingen:
Een reactie posten