தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

சுகாதாரம், கல்வித்துறைகளை வடமாகாண நிர்வாகத்திற்குள் உள்வாங்க நியதிச் சட்டங்கள் உருவாக்கம்!

எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு: ரிசாத்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 12:12.04 PM GMT ]
தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்த தினத்தன்று, எனக்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து ஓர் அனாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது.
அரசாங்கத்திலிருந்து விலகினால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் என அந்த தொலைபேசி அழைப்பின் போது எனக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அந்த தொலைபேசியின் இலக்கம் மற்றும் அது தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன எனவும் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp4.html
சரத் பொன்சேகாவின் மறு உருவமே மைத்திரிபால சிறிசேன: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 12:30.38 PM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் மறு உருவமே இம்முறை பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிவேக வீதி அமைப்பின் போது அரசாங்கம் நிதி மோசடி செய்ததாக எதிர்கட்சி குற்றம் சுமத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதி மோசடி செய்ய வேண்டுமாயின் அவர் யுத்தத்தின் போது மோசடி செய்திருப்பார் என்றும் ஆனால் அவர் அப்படி செய்யாது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, உலகில் முன்னேற்றமடைந்த நாடுகள் வரிசையில் இலங்கை இருப்பதாகவும் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp5.html

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு உலர் உணவு உதவி.
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 12:51.13 PM GMT ]
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக வன்னியில் குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன. அத்துடன் வாய்க்கால்கள் மற்றும் சிறிய குளங்கள் குட்டைகள் நீரால் நிரம்பி வழிகின்றன
கடும் மழை காரணமாக கிளிநொச்சியில் அநேக கிராமங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மேற்கில் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஸ்கந்தபுரம் புதிய குடியிருப்பு கண்ணகிபுரம் முட்கொம்பன் ஆனைவிழுந்தான் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாகவும் வீடுகள் ஊற்றுப்பிடித்துள்ளதன் காரணமாகவும் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்று இவ்வாறு பள்ளிகளில் தங்கியுள்ள மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் கனடா வாழவைப்போம் அமைப்பு உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளது.
இந்தப் பொதிகளை மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான தயாபரன், அன்ரன்டானியல், அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச தமிழரசுகட்சியின் தலைவர் சிறி, செயலாளர் கதிர்மகன், இளைஞர் அணி செயலாளர் கு.சர்வானந்தா உட்பட கட்சி நிர்வாகிகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp6.html
சுகாதாரம், கல்வித்துறைகளை வடமாகாண நிர்வாகத்திற்குள் உள்வாங்க நியதிச் சட்டங்கள் உருவாக்கம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 01:24.05 PM GMT ]
வடமாகாண சபையின் கீழ் முழுமையாக போக்குவரத்து துறையினை கொண்டுவரும் வகையில் போக்குவரத்து அதிகார சபையினை உருவாக்குவதற்கு போக்குவரத்து நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளினை மாகாண நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதற்கான நியதிச் சட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சுகாதாரத் திணைக்களம் மற்றும் மாகாண கல்வித்திணைக்களம் ஆகியவற்றை மாகாண நிர்வாகத்தின் கீ ழ் செயற்படுத்தும் நியதிச்சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபையினால் பல்வேறு விடயங்களுக்கான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டும் பல நிறைவேற்றப்பட்டும் உள்ள நிலையில், இந்நிலையில் சுகாதார அமைச்சினால் ஒரு நியதிச்சட்டமும், கல்வியமைச்சினால் இரு நியதிச்சட்டங்களும் உருவாக்கப்பட்டு மாகாண பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அதில் சுகாதார திணைக்களம், கல்வித்திணைக்களம் என்பவற்றின் நிர்வாக நடைமுறைகளை மாகாண சபையின் கீழ் செயற்படுத்தும் நியதிச்சட்டங்களும் உள்ளடக்கம்.
இவற்றுக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நியதிச்சட்டம் மற்றும் முன்பள் ளிகளைக் கட்டுப்படுத்தும் நியதிச்சட்டம் ஆகியனவும்
உள்ளடக்கம். இந்நிலையில் குறித்த நியதிச்சட்டங்கள் விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp7.html

Geen opmerkingen:

Een reactie posten