தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

திலகரட்ன தில்சான், மஹிந்தவுக்கு ஆதரவு

இலங்கையில் கட்சி மாறல் பிழையான வழியில் செல்கிறது!
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 02:31.23 PM GMT ]
இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்கள் இரண்டு தரப்பிலும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் இன்று கட்சி மாறல் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பின்போது எதிர்பாராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்த தெஹிவளை, கல்கிஸ்ஸை நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் சவீந்திர டி சில்வா குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புகழ்ந்து பேசினார்.
அத்துடன் தாம் மஹிந்த ராஜபக்சவை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வந்துள்ளதாக முன்னதாக அறிமுகம் செய்து வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உட்பட்டவர்கள் வியப்புக்கு உள்ளாகினர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahqy.html

திலகரட்ன தில்சான், மஹிந்தவுக்கு ஆதரவு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 03:05.42 PM GMT ]
இலங்கையின் கிரிக்கெட் அணி வீரர் திலகரட்ன தில்சான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கான பிரசார காரியாலயம் இதனை அறிவித்துள்ளது.
இன்று தில்சான், மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டதாக அந்தக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தில்சான், மஹிந்த ராஜபக்சவுக்காக தொலைக்காட்சி பிரசாரங்களிலும் தோன்றி வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahq0.html

Geen opmerkingen:

Een reactie posten