தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் ஐ.நா மனித உரிமைப் பேரவையுடன் போராட வேண்டி உள்ளது- ஜீ.எல்.பீரிஸ்!

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் மஹிந்தரும், மைத்திரிபால சிறிசேனவும்!

[ Dec 02, 2014 01:39:38 AM | வாசித்தோர் : 6210 ]
நன்கு திட்டமிட்டு மஹிந்தரை வீழ்த்தும் காய்நகர்த்தலில் பலரின் எதிர்பார்ப்பின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை முன்நிறுத்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வெற்றியடைந்துள்ளார். அம்மையாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்போம். காரணம் அரசின் மோப்பத்திற்கு இரையாகாமல் செய்மதி தொலைபேசிகள் மூலமாகவும் வெவ்வேறு வாகனங்கள் மூலமாவும் கடந்த வருடங்களாக இந்த காய்நகர்த்தல் நடந்துள்ளதாக அறியவருகின்றது. இது புலிகளிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாகவே பார்க்கப்படுகின்றது.காரணம் அண்மைக்காலங்களாக அரசிலிருந்து விலகக் கூடியவர்கள் அதிருப்தியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒற்றுக் கேட்கப்பட்டு வந்தது. அத்துடன் சில அமைச்சர்களின் நாளாந்த அசைவுகள் மற்றும் அவர்களது நடமாட்டங்கள் அரசின் உளவுத் துறையினால் மோப்பம் பிடிக்கப்பட்டு வந்தது. இந்த மோப்பங்களில் இருந்து தப்பிக்கவும் அரசின் மோப்பக் காரர்களுக்கும் தண்ணி காட்டிவிட்டு மிகவும் இரகசியமாகவே இந்தக் காய்நகர்த்தல்கள் நடைபெற்று வந்துள்ளது. வல்லரசு நாடு ஒன்றின் இலங்கைத் தூதுவர் ஊடாக இந்தப்பணி கச்சிதமாக நடந்துள்ளது. சகல திட்டங்களையும் கச்சிதமாக முடித்து விட்டு அந்த தூதுவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சபாஷ் தூதுவர். ஆனால் அரசைத் திசை திருப்புவதற்காக கரு ஜெயசூரிய என்றும், ரணில் என்றும்.சஜீத் என்றும் அரசைப் பேய்க்காட்டி விட்டு உண்மையான ஆட்டக்காரர் இனங்காட்டப்பட்டுள்ளார். இப்படித்தான் புலிகள் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களின் போதும் படைகளைத் திசை திருப்பிவிட்டு கச்சிதமாக தங்களது தாக்குதல்களில் வெற்றி காண்பார்கள். அதாவது கிழக்கில் தாக்குதல் திட்டத்தை வைத்து விட்டு வடக்கில் தாக்கப் போகின்றோம் என்று பெய்யான தகவல் ஒன்றைக் கசிய விடுவார்கள். பொய்யாக செய்தியை தங்களது வாக்கி டோக்கியில் சும்மா கசிய விடுவார்கள். இதைப் படையினர் ஒற்றுக் கேட்டு நம்பிக் கொண்டு கிழக்கில் படை நடவடிக்கைகளை உஷார் படுத்துவார்கள். ஆனால் வடக்கில் தாக்குதல் நடத்தி வெற்றியடைவார்கள். இப்படியாக படையினரைத் திசை திருப்பி விட்டு பெருமளவு தாக்குதல்களில் புலிகள் வெற்றி கண்டார்கள். இது புலிகளின் ஊடுருவித் தாக்கும் பாணியிலானது. இப்படியான பாணியில்தான் மைத்திரியை, சந்திரிகா அணியினர் தயார் படுத்தியுள்ளார்கள். யாருக்கும் தெரியாமல் மைத்திரியை ஒழித்து வைத்துள்ளார்கள். புலிகளின் இந்தப் பாணியில்தான் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா இனங்காட்டப்பட்டுள்ளார். அரசாங்க உளவுத்துறைக்கு தண்ணிகாட்டி விட்டுத்தான் நாங்கள் மைத்திரிபாலவை இப்படிக் களமிறங்க முடிந்ததாக முன்னாள் அமைச்சரும் எதிர்க் கூட்டணியின் பிரதான பாத்திரமேற்றுள்ளவருமான ராஜீத சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது அரச கூட்டுக்குள் இருந்து கிளம்பவுள்ளவர்களுடன் மிகவும் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்தரின் கூட்டுக்குள் இருந்து பொது வேட்பாளர் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் என்பவர் ஆளும் அரசின் கூட்டுக்குள் ஊடுருவிப் புகுந்து அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து தற்போது மஹிந்தர் மீது அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை தன்வசம் கொண்டு வந்து வெற்றி பெறும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஐ.தே.க.யின் செல்வாக்குக் குன்றாமல் குறையாமல் உள்ளது. ஐ.தே.க.யின் வாக்குகளுடன் ஆளும் தரப்பில் இருந்து பலரை இழுத்து வந்து விட்டால் அரசு ஆட்டம் கண்டு விடும். இந்த வல்லமையுள்ள ஒருவரை மஹிந்தவின் கூட்டுக்குள் இருந்து இறக்க வேண்டும் என்று கடந்த வாரம் எழுதியியிருந்தோம். அதன்படியே மைத்திரி அமைந்து விட்டார். ஆனால் நாங்கள் மங்களவை எழுதியிருந்தோம். உண்மையிலேயே அரசு பயந்து விட்டது. அரசு ஆட்டம் கண்டு விட்டது. கரு ஜெயசூரிய பொது வேட்பாளர் என்றதும் மஹிந்தர் உடனடியாக வாழத்துத் தெரிவித்தார். அப்படியானால் தோல்வி பயமில்லையென்றால் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவிக்கலாம்தானே. அரசுக்கு தோல்வி பயம் கவ்விக் கொண்டுள்ளது. அதனால்தான் அரசு கோவையுள்ளதாகப் பயம் காட்டுகின்றது. இந்தப் போராட்டம் என்பது பணம். முப்படை, ஆட்பலம், அரசின் சகல வளங்கள் நிறைந்த நாடு முழுவதும் அறியப்பட்ட நன்கு பரிச்சயமான மஹிந்தவை எதிர்த்து நிற்பது என்பது மிகவும் இலேசுப்பட்ட காரியமல்ல. அதற்கும் மேலாக வாக்கு மோசடிகள் வாக்களிப்புத் தடைகள். உச்சகட்ட மோதல்கள், உயிர் இழப்புக்கள் கொலை அச்சுறுத்தல்கள், கொலை முயற்சிகள் இப்படியாக தென்னிலங்கை கண்டிராத ஒரு மாபெரும் பாரிய பயங்கரமான தேர்தலை நாடு சந்திக்கவுள்ளது. இவைகளைக் கடந்து மைத்திரி அணி நின்று பிடிக்குமா என்பது ஒரு சந்தேகம்தான். 2010 ஆம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் மைத்திரிக்கும் ஏற்படும் என்று மஹிந்தர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதானது அச்சுறுத்தலின் உச்சக்கட்டம் எனலாம். அத்துடன் தனக்கு ஏற்பட்ட நிலை மைத்திரிக்கும் ஏற்படலாம் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1554.html

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை வருகிறார்! சீன போர்க்கப்பல்கள் குறித்து பேசுவார்!.

[ Dec 02, 2014 01:52:57 AM | வாசித்தோர் : 950 ]
சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று இலங்கை வருகிறார்.அப்போது, கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என தெரிகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையும், அக்டோபர் 31-ந் தேதி முதல் நவம்பர் 6-ந் தேதி வரையும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் என்றும், எரிபொருள் நிரப்புவதற்காகத்தான் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் இலங்கை கூறியது. எனினும் இந்த விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது. இது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பேசிய வெளிவிவகாரத்துறை இணை மந்திரி வி.கே.சிங், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும் அப்போது அவர் எடுத்துக் கூறினார். முன்னதாக கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கையிடம் தனது அதிருப்தியை கடுமையாக இந்தியா தெரிவித்து இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்த இலங்கை ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சவிடம், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் சர்வதேச கடல்பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான மாநாடு இலங்கையில் நடக்கிறது. இதில், ‘காலி பேச்சுவார்த்தை 2014’ என்ற தலைப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் முக்கியமான உரையாற்றுகிறார். இதற்காக அவர் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு முதல் முறையாக வருகை தருகிறார். மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசுகிறார். மேலும் அந்த நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது சீன போர்க்கப்பல் நடமாட்டம் குறித்த இந்தியாவின் கவலையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1558.html

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் ஐ.நா மனித உரிமைப் பேரவையுடன் போராட வேண்டி உள்ளது- ஜீ.எல்.பீரிஸ்

[ Dec 02, 2014 01:49:17 AM | வாசித்தோர் : 3285 ]
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடற்பாதுகாப்பு தொடர்பான காலி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக் கடற்படையினர் வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கும் கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கப்பல்களை கடத்தியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து பணம் கொடுக்க எந்தவொரு நாடும் முயற்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைப் படையினர் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆறு மாத காலப்பகுதிக்கு ஒரு தடவையும் பணம் பொருள் காலத்தை செலவிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் குற்றச்சாட்டுக்ளுக்கு எதிராக போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்
http://www.athirvu.com/newsdetail/1557.html

Geen opmerkingen:

Een reactie posten