[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 02:01.19 AM GMT ]
இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். அரசாங்கத்திற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர்.
நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன்.
இந்த அரசாங்கத்தில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.
போதைப் பொருள் காணப்படுகின்றது அவற்றை நாம் பிடிக்கின்றோம். இவற்றை பத்திரிகைகளில் பிரசூரித்து நாட்டில் போதைப்பொருள் இருப்பதாக பிரச்சாரம் செய்கிகின்றனர்.
கண்களை மூடிக்கொண்டிருந்தால் ஒன்றுமில்லை. பிடிப்பதனால்தான் போதைப்பொருள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுகின்றது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்என தராதரம் பாராது நாம் அனைவரையும் நீதிமன்றின் முன் நிறுத்தினோம்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நீதிமன்றம் தண்டனை விதிக்கும். நான் சட்டத்தரணி என்ற காரணத்தினால் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளேன்.
இன்று ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் கருத்துக்களை வெளியிட எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது இதனால் அனைவரும் சுதந்திரமாக செயற்பட வழியமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் சிறிசந்த செவன வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq1.html
பரிசுத்த பாப்பரசர் படம் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரசார சுவரொட்டிகளை அகற்றவும்!- கத்தோலிக்க சபை
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 02:17.44 AM GMT ]
இந்தநிலையில் பாப்பரசரின் இலங்கை விஜயம் ரத்தாகும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்தையும் சபை மறுத்துள்ளது.
பாப்பரசரின் விஜயத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறுவதால் அவரின் விஜயத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பாப்பரசரின் விஜயம் 2015 ஜனவரி 13 முதல் 15வரையில் திட்டமிட்டப்படி இடம்பெறும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq2.html
ஜனாதிபதி தேர்தல்! 7ம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்பு!
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 02:26.19 AM GMT ]
இதன்படி, பதிவு செய்த அரசியல் கட்சியொன்றிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq3.html
வடகிழக்கு மக்களைப் போன்றே மலையக மக்களும் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர்: அரியம் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 02:59.53 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறை ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயங்களில் பதுளை கொஸ்லாந்த பகுதிகளில் மண்சரிவினால் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் முகமாக அஞ்சலியுடனான பூசை வழிபாடு இடம்பெற்றது.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஆலயத்தின் தலைவர் சி.தவராசா தலைமையில் இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
மண்சரிவு நடைபெற்று ஒரு மாதம் முடிந்தும் இது நாள்வரைக்கும் இன்னும் அங்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிரந்தர வீடு அமைத்துக் கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் வேதனைதரும் விடயமாகும்.
இந்த நாட்டிலே ஜனாதிபதி தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அங்கு வாழும் (மலையக) மக்களுக்கான நிரந்தர தனியான வீட்டுத்திட்டத்தினை செய்ய முடியாமல் இருப்பது மிகவும் மோசமான செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
வடக்குக் கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வில் புறக்கணிப்பு காட்டப்படுவதனைப்போன்று மலைய மக்களுக்கும் நிரந்தர வீட்டுத்திட்டம் புறக்கணிப்பு காட்டப்படுகின்றது.
இச்செயற்பாடானது ஒட்டுமொத்த இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இனவாத அரசுகளால் இடம்பெறும் ஒரு திட்டமிட்ட செயற்பாடாகும்.
அந்த மக்களை உரிய இடங்களில் உரிய நேரத்தில் சகல வசதிகளுடனும் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுத்து வாழவைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq4.html
Geen opmerkingen:
Een reactie posten