[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 12:59.22 AM GMT ]
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார். தமிழின அழிப்பை செய்யும், இலங்கை அதிபர் ராஜபக்சவை வாழ்த்தியதோடு, அவர் மீண்டும் அதிபராக வரவேண்டும் என்று மோடி சொல்வது தவறு'' என்று கூறினார்.
இதற்கிடையே, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஊழலற்ற கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி பா.ஜ.க.வை எரிச்சலடைய வைத்தது. குறிப்பாக தே.மு.தி.க.வை வைகோ தனது பக்கம் இழுக்க பார்ப்பது பா.ஜ. தலைவர்களை கடுப்பேற்றியது.
இந்நிலையில், ''பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ ஒருமையில் பேசி வருகிறார். அவர் இதை நிறுத்தாவிட்டால் பாதுகாப்பாக திரும்ப முடியாது. மேலும், அவர் நாவை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. அவரை எப்படி அடக்குவது என்பது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும்'' என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக கூறியிருந்தார்.
மேலும், ''பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்குள் வைகோ தானாகவே விலக வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியும் அடிக்கடி கூறி வருகிறார்.
அதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ‘‘மத்திய அரசை வைகோ விமர்சனம் செய்வது சரியல்ல’’ எனக் கூறி வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 8 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வைகோ, அதன் பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkp7.html
அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 01:09.22 AM GMT ]
நேற்று 35 கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்கா உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ்சின் எம்.பியும், ஈரான் நாட்டின் தூதுவராகவும், ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில்தான் பௌத்த இயக்கமான பொதுபலசேனாவும் இணைந்துள்ளது.
இந்த பொதுபலசேனா இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக காட்டிய அட்டகாசங்களை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
நான் ஈரான் நாட்டின் தூதுவராக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் யுத்த வெற்றிக்கு அந்த நாட்டில் இருந்து பல உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
யுத்தம் ஓய்ந்த பின் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன.
இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்காக 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
இந்த வேட்பாளருக்கே சிறுபான்மை மக்களது ஆதரவு கிடைக்கும். இந்த ஆட்சியின் கீழ் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருடன் ஒன்று சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் சுகையிர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkqy.html
டோவால், ரணிலையும் சம்பந்தனையும் சந்தித்தார்!
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 01:19.12 AM GMT ]
இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அஜித் டோவால் நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்கு பின்னரான நிலைமை குறித்து டோவாலுக்கு விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkqz.html
இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 01:46.10 AM GMT ]
அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது.
இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றில் இருந்து விலகி இருக்குமாறு அதில் பிரித்தானிய பிரஜைகள் கோரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது தேர்தல் காலமாகையால், அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் பிரித்தானியா தமது நாட்டவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் உட்பட்ட சம்பவங்களையும் பிரித்தானிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq0.html
Geen opmerkingen:
Een reactie posten