தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

மைத்திரிக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு!- தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

எதிரணியின் ஊடக மாநாட்டில் மகிந்தவை புகழ்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர்! தேனீர் கொடுத்து அனுப்பினர்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 12:20.56 AM GMT ]
பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்தவை புகழ்பாடிவிட்டு அமைதியாகச் சென்றார்.
பொது எதிரணியினரும், அவர் கருத்துத் தெரிவித்து முடியும் வரை குழப்பாது காத்திருந்து, இதுவே எம்மிடம் இருக்கும் ஜனநாயகம் என்று கூறி அந்த உறுப்பினருக்கு தேனீர் கொடுத்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
தெஹிவளை கல்கிசை மாநகரசபை ஆளும்தரப்பு உறுப்பினரான சவித்ர டி சில்வாவே எதிரணி இன்று நடத்திய ஊடக மாநாட்டுக்கு வந்திருந்தார்.
குறித்த உறுப்பினர் பொது எதிரணியில் இணைந்து கொள்வதற்காகவே ஊடக மாநாட்டுக்கு வந்துள்ளார் என்று தெரிவித்து ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அவரை அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து சவித்ர டி சில்வாவுக்கு பேச அனுமதி கொடுக்கப்பட்டது. அவர் "நான் ஒருபோதும் மஹிந்த ராஜபக்‌சவைக் காட்டிக்கொடுக்கமாட்டேன்" என்று அதிர்ச்சிக் கருத்தை தெரிவித்தார்.
அதனால் ஊடக மாநாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. எனினும் அவரைக் குழப்பாது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்க எதிரணியைச் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பம் வழங்கினர்.
தொடர்ந்து உரையாற்றிய சவித்ர டி சில்வா, நான் மூன்று வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறேன். தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்சவுடன்தான் இருப்பேன். மஹிந்தவை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டேன். என்றார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், 'அப்படி என்றால் நீங்கள் ஏன் இந்த ஊடக மாநாட்டுக்கு வந்தீர்கள்?' என்று கேட்டார். இதற்கு, 'இந்த இடமே எனது கருத்தைத் தெரிவிப்பதற்கு ஏற்ற இடம்.அதனால் வந்தேன்' என்றார் அவர்.
அவர் கருத்துத் தெரிவித்து முடித்ததும் தேனீர் கொடுத்து பாதுகாப்பாக அனுப்பியும் வைத்தனர் பொது எதிரணித் தரப்பினர்.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த சுஜீவ சேனசிங்க, "இதுவே உண்மையான ஜனநாயகம். பொது எதிரணி அவரது கருத்துக்கு மதிப்பளித்திருக்கிறது".- என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahq7.html
கிராமங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 01:07.18 AM GMT ]
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போது கிராமிய மட்டத்தில் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும்கட்சியின் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர்.
நேற்று அனுராதபுரத்தில், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 16 பேர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
சீதாவாக்கை பிரதேசசபையின் ஐந்து உறுப்பினர்களும், மற்றும் அனுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் 8 உறுப்பினர்களும், வடமத்திய மாகாணசபை உறுப்பினர் பி.பி.திசநாயக்கவும், மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் இணைந்துள்ளனர்.
அதேவேளை, கண்டியில், சிறிலங்கா பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் இணைப்புச்செயலாளரும், ஐதேகவில் இணைந்து கொண்டுள்ளார்.
எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கும் நிலையில், ஆளும்கட்சியின் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மெல்ல மெல்ல மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கிராமங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை உருவாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahry.html

மைத்திரிக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு!- தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:51.10 AM GMT ]
எதிரணி ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ணவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவு எழுத்துமூலம் இன்னும் கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொதுவேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
தேர்தல் சட்டப்படி வேட்பாளர்களுக்கு ஒரேவிதமான பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.
எனினும் மைத்திரிபாலவுக்கு தற்போது 5 விசேட அதிரடிப்படைவீரர்களே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr3.html
கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் சுதந்திரக் கட்சியில் பதவி வகிக்கின்றனர்!– சந்திரிக்கா
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:56.29 AM GMT ]
தேசப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் பதவிகளை வகித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இரண்டு தரப்பிலிருந்து போட்டியிடும் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட தேசப்பற்றாளர்களினால் சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று கட்சியில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அல்லலுறுகின்றனர்.
கல்வித்துறையில் பாரியளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கல்வி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
நாட்டின் மொத்த வளங்களும் ஒரு சில தரப்பினரால் அனுபவிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் நலனுக்காக சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
ஊழல் மோசடிகள் இல்லையென்றால் சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr4.html

Geen opmerkingen:

Een reactie posten