[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 11:29.24 AM GMT ]
சந்தேக நபர் கிரிந்திவல ஊரபொல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான நபர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இருந்து சென்ற வேறு ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார்.
இந்த நபர் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்கூட்டியே கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவருக்கு எதிராக வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பான அறிக்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahp0.html
வடமாகாணத்தினை திட்டமிட்டு புறக்கணித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 11:24.59 AM GMT ]
இலங்கை பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் எவ்விதமான நிதியும் வழங்கப்படாத நிலையில் வடமாகாணத்தின் 5மாவட்டங்கள் தவிர்ந்த மற்றய 20மாவட்டங்களுக்கும் 1002மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.
மேற்படி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டுக்கான செயற்றிட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையின் 25 மாவட்டங்களில் 20மாவட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளத என்ற தகவல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் வடக்கின் 5மாவட்டங்களுக்கும், எவ்விதமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக முன்னதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கிராமங்களுக்கு 10மில்லியன் ரூபா வழங்கும் செயற்றிட்டத்திலும் வடமாகாணம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக இந்தச்செயற்றிட்டத்தில் பிரதேச சபைகளே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் வடக்கின் பெரும்பாலான பிரதேச சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உள்ள நிலையில் அவர்களை மீறிக்கொண்டு ஈ.பி.டி.பியினர் குறித்த நிதிக்கான செயற்றிட்டங்களை கோரியிருந்தன. ஆனால் அதனை அவ்வாறு செய்ய முடியாது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய நிலையில் அந்த நிதி முழுமையாக, வடக்கிற்கு
நிறுத்தப்பட்டு மற்றய மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.
நிறுத்தப்பட்டு மற்றய மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் பிற அபிவிருத்தி செயற்றிட்டங்களிலும் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் வடமாகாணம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்த அறிக்கையின் மூலம் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahpz.html
வான் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 11:02.36 AM GMT ]
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதியுடன் பயணித்த மற்றொருவரும் படுகாயத்திற்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பயணித்த மற்றொருவரின் நிலைமை மிக மோசமாவுள்ளதனால் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து இன்று 2 மணியளவில் இடம்பெற்றதாகவும் சீரற்ற காலநிலையே இவ்விபத்துக்கான காரணம் எனவும் வட்டவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
2015 ஆண்டுக்கான கலண்டர்களை ஹட்டன் பகுதிக்கு கொண்டு சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaho7.html
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் கூட்டமைப்பு வாக்குமூலம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 10:50.03 AM GMT ]
கடந்த வாரம் யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் அரசியல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக ஈ.பி.டி.பியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்ததுடன் இதில் கூட்டமைப்பின் பலர் காயமடைந்தும் இருந்தனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தம்மீது தாக்குதல் நடத்தியதாக ஈ.பி.டி.பி முந்திக் கொண்டு பொலிசில் முறைப்பாடு செய்ததுடன் வைத்தியசாலையிலும் சென்று தஞ்சமடைந்து கொண்டார்கள்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன் ஆனோல்ட், கஜதீபன், சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை தலைவர்களான வலி,வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் மற்றும் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த அழைப்பின் படி இன்றைய தினம் காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அழைப்பு கிடைக்காமையினால் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் சிவாஜிலிங்கம் மற்றும் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகியயோர் மட்டும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
எனினும் மற்றய 5பேர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருக்காத நிலையில் அனைவரையும் இணைத்து எதிர்வரும் 12ம் திகதி தை மாதம் 2015ம் ஆண்டு பொலிஸ் நிலையத்திற்கு வருகைதருமாறும் 16ம் திகதி நீதிமன்றில் குறித்த சம்பவம் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டிய தேவையுள்ளதாகவும், பொலிஸார் மாகாணசபை உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaho6.html
Geen opmerkingen:
Een reactie posten