[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 04:54.03 PM GMT ]
இலங்கையின் அரசாங்க ஊடகங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சார்பாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது.
அரசாங்க ஊடகங்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதில் தேர்தல்கள் ஆணையாளர் தோல்வி கண்டுள்ளார்.
எனவே தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அந்தக்கட்சி கேட்டுள்ளது.
நடைமுறை ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகளை தொடர்ந்தும் மீறிவருகின்றமை வியப்பை அளிக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டைக்கூட நேற்று அரசாங்க ஊடகம் நேரடி ஒளிபரப்பு செய்தது அத்துடன் தனியார் ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின.
அதேநேரம், இந்த ஒளிபரப்பின் பின்னர் பல பாடல்கள் கட்டணம் செலுத்தப்படாமலேயே ஒளிபரப்பப்பட்டன என்று ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவின் பழைய உரைகள் அடங்கிய விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை தேர்தல்கள் ஆணையாளர் தடை செய்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நேரடி ஒளிபரப்புக்களை தடுப்பதில் தேர்தல்கள் ஆணையாளர் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahq5.html
ஏ எச் எம் அஸ்வர் நீக்கப்பட்டமையானது, முஸ்லிம் மக்களுக்கான பெரிய நிவாரணம்-! அமீர்அலி
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:32.17 AM GMT ]
ஏ எச் எம் அஸ்வர் பதவி விலகிய நிலையிலேயே அமீர் அலி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ரிசாத் பதியுதீனுடன் இணைந்து ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அநீதிகளை நியாயப்படுத்தும் வகையில் அஸ்வர் செயற்பட்டு வந்தாக அமீர் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தமக்கு ஏற்கனவே உறுதியளித்தப்படியே அமீர் அலிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக் கொள்ளப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahrz.html
ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் தொடர்பில் ஆராய்கிறது அமெரிக்கா!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:33.37 AM GMT ]
இலங்கையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வன்னி மாவட்டத்தின் கள நிலவரங்களை அமெரிக்கா ஆராய்ந்துள்ளதாக உள்நாட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி சந்தீப் குரோஸ் கடந்த 23ம் திகதியன்று புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரவிகரன் உட்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கனகரட்னம் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதனை தவிர குரொஸ் டிசம்பர் 22ம் திகதியன்று திருகோணமலையில் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணியையும் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க தூதரக முதல் செயலாளர் மைக்கல் எர்வின்ஹான்டும் உடனிருந்துள்ளார்.
இதன்போது ஆளும் மற்றும் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சீன உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr0.html
படித்தவர்களிடமா, குண்டர் கூட்டத்திடமா நாட்டை ஒப்படைப்பது என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்!- ரணில்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:39.41 AM GMT ]
அறிவை மையமாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளின் இலக்காக அமைந்துள்ளது.
புத்திஜீவிகளுக்கு நாட்டை ஆட்சி செய்ய அனுமதிப்பதா அல்லது குண்டர்களிடம் ஆட்சி செய்ய ஒப்படைப்பதா?
இன்று சிறிகொத்த மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கம் இலவச கல்வியை இல்லாமல் செய்ய முயற்சித்து வருகின்றது.
மொத்த தேசிய உற்பத்தியில் அரசாங்கம் 1.6 வீதத்தையே கல்விக்காக செலவிடுகின்றது.
பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்றவற்றின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது.
அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்பின்றி அதிபர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது.
கல்விச் சேவை முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இளைஞர் யுவதிகளிடமும் ஏதாவது ஒர் திறமை காணப்படுகின்றது அதனை இனம் கண்டு அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எல்லாப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கும் கல்வியை சிறந்த முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமேன ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டேயில் நடைபெற்ற கட்சியின் தொழிற்சங்க மாநாடு ஒன்றில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr1.html
அன்பையும், பொறுமையையும் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்!- ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:43.36 AM GMT ]
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பயங்கரவாத அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்டுள்ளன.
யேசு பாலன் பிறந்த இந்நாளில் அன்பு மற்றும் பொறுமை பற்றிய செய்தி உலகிற்கு உணர்த்தப்படுகின்றது.
இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள் யேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றனர்.
யேசு கிறிஸ்துவின் பிறப்பு மனித குலத்தின் விமோசனத்திற்கு வழியமைக்கும் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள்.
அனைத்து உயிரினங்களுக்கும் அன்பைக் காட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr2.html
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்வார்: முன்னணி சோசலிச கட்சி
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 02:58.07 AM GMT ]
சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
வீசா காலம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் தங்கியிருந்தமைக்கான அபராதப் பணம் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் செலுத்தப்பட்டது.
நேற்று இந்தப் பணம் செலுத்தப்பட்டது.
வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருந்தமைக்காக 39120 ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அபராதப் பணத்தை செலுத்திவிட்டால் நாட்டுக்குள் பிரவேசிக்க காணப்பட்ட தடை நீங்கும்.
அபராதப் பணம் செலுத்தப்பட்டதன் பின்னரும் குமார் குணரட்னம் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டால் அது அரசியல் ரீதியான காரணத்திற்காகவே இருக்கும் என புபுது ஜாகொட நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr5.html
ஸ்ரீகோத்தா ஆர்ப்பாட்டத்துடன் தொடர்பு இல்லை: அமைச்சர் விமல் வீரவன்ச
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 03:03.19 AM GMT ]
தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமைச்சர் விமல் வீரவன்ச அங்கம் வகிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமும் உள்ளடங்குகிறது.
எனினும் அமைச்சரின் கட்சியான சுதந்திர முன்னணி இதில் உள்ளடங்கவில்லை.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் வடக்கில் இருந்து படையினரை குறைக்கும் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தியே நேற்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் வெளியில் வந்து தமக்கு பதில் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். இந்த நிலையிலேயே மோதல் உருவாகி பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr6.html
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக யேசு கிறிஸ்து போராடினார்!– மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 03:19.45 AM GMT ]
புனித பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்திற்காக முழு நாடுமே காத்திருக்கும் தருணத்தில், யேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வழிமுறைகளை நினைவுபடுத்துவது பொருத்தமாக அமையும்.
யேசு கிறிஸ்து தனது முழு வாழ்க்கையையே அநீதிக்கு எதிராக போராடுவதற்காக அர்ப்பணித்தார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள், மதகுருமாருக்கு எதிராகவே அவர் போராடினார்.
எமது தாய்நாடு ஊழல் மோசடிகளினால் ஊழன்றிருக்கும் காலத்தில் இந்த விடயங்களை நினைவுபடுத்துவது பொருத்தமானது.
யேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி வாழ வேண்டியது அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளினதும் கடமையாகும் என தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahr7.html
Geen opmerkingen:
Een reactie posten