[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 09:05.45 AM GMT ]
பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல முடியாது என்ற நீதிமன்ற தடை இல்லாத காரணத்தினாலேயே, விமான நிலையத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவரை நாட்டைவிட்டுச் செல்வதைத் தடுக்கவோ அல்லது அவரைக் கைது செய்யவோ முடியாமல் போனது.
பொலிஸ் அதிகாரியொருவர் விமானநிலையத்தில் இருந்திருந்தால் மாத்திரமே அவரைக் கைது செய்திருக்க முடியும். இருப்பினும் அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் எவரும் இருந்திருக்கவில்லை.
பிரதி அமைச்சர் மீண்டும் நாட்டுக்கு வந்த பின்னரே அவரை கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagqy.html
வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடக்கு சுகாதார அமைச்சர் நேரில் சென்று ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 09:17.01 AM GMT ]
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவே வவுனியா மாவட்டத்தில் தற்போதைய மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் 12 நலன்புரி நியைங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதைவிட வவுனியா பிரதேச செயலக பிரிவில் 06 நலன்புரி நிலையங்களிலும் மொத்தமாக மாவட்டத்தில் 20 நலன்புரிநிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுக்கட்டிடங்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் நேற்று இந்தப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் உடனடியாக செயற்படும் வகையில் நடமாடும் வைத்திய சேவையை இடம் பெயர்ந்தவர்கள் தங்கி வாழும் தற்காலிக முகாம்களில் நடாத்துவதற்கு சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளை பணித்ததோடு அவர்களுக்கான அவசர நிவாரண சுகாதார பொருட்கள் மற்றும் பால்மா போன்றவற்றை வழங்கி வைத்தார்.
இதன்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagqz.html
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இரு தரப்பிலும் முக்கிய கட்சி தாவல்கள்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 09:34.02 AM GMT ]
அரசாங்கத்திடம் இருந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த ஒருவர் ஆளும் கட்சிக்கு தாவ உள்ளதாகவும் அச்சுறுத்தல் மற்றும் தனது குடும்பத்தினர் எதிர்நோக்கும் பணப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவர் இவ்வாறு ஆளும் கட்சியின் பக்கம் தாவ உள்ளதாகவும் பேசப்படுகிறது.
அத்துடன் அரசாங்கத்தில் இருந்து கட்சி தாவ உள்ள நபர் தற்போது மகிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமாக உள்ளவர் என கூறப்படுகிறது.
அவர் எதிரணிக்கு தாவும் நிலையில், அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் அது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என பொது வேட்பாளர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagq0.html
மீண்டும் சுனாமி வந்தாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை: அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 09:47.51 AM GMT ]
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகின்றன. அனர்த்தத்தின் பாதிப்புகளை நினைவு கூறும் வகையில் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தவிர, ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட காலப்பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனை நினைவு கூரும் முகமாக இன்று அங்கு பாரிய அளவில் பிராத்தனை நிகழ்வுகள் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagq3.html
தற்பாதுகாப்பு நோக்கில் சிங்கப்பூர் வந்தேன்: நிசாந்த முத்துஹெட்டிகம
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 09:38.33 AM GMT ]
பொலிஸாருக்கு விசர்பிடித்து என்னைக் கைது செய்ய தேடுகின்றனர். பாதுகாப்பு நோக்கில் நான் சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன்.
இப்போதுதான் சிங்கப்பூருக்கு வந்தேன். பிரச்சினை ஏற்பட்டால் எவரும் பார்ப்பதற்கு இல்லை. என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள நான் சிங்கப்பூர் வந்தேன்.
இரண்டு நண்பர்களுடன் நான் நாட்டை விட்டு வெளியேறினேன். விமான நிலையத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.
விமான நிலைய அதிகாரிகள் என்னை நன்றாக கவனித்தனர்.
இரண்டு தினங்களில் நாடு திரும்புவேன் என நிசாந்த முத்துஹெட்டிகம காலியில் உள்ள தமது நண்பர் ஒருவருக்கு சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் இன்று காலை 6.00 மணியளவில் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagq1.html
Geen opmerkingen:
Een reactie posten