மட்டக்களப்பில் மனைவியை கொடூரமாகத் தாக்கிய கணவன் 25 வருடங்களின் பின் சிக்கினார்- கனத்த மழை: போக்குவரத்து பாதிப்பு
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:51.53 AM GMT ]
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த சீனித்தம்பி மகேஸ்வரி (வயது தற்போது 53) என்பவரை அவரது கணவரான கந்தையா வேலப்பு (தற்போது வயது 67) என்பவர் குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தி காயப்படுத்திய பின்னர் 25 வருடங்களாக தலைமறைவாகி இருந்துள்ளார்.
இதன்பின்னர், நீதி மன்றம் இவருக்கெதிராக பகிரங்கப் பிடியாணை பிறப்பித்திருந்தது. எனினும் அவர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஏறாவூர் பொலிஸ் பிரிவுற்குட்பட்ட ஐயன்கேணிக் கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது, சந்தேக நபர் பைத்திய பிச்சைக்காரன் வேடத்தில் தகரக்பேணிகளை பொறுக்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் கூறினர்.
மட்டக்களப்பில் கனத்த மழை நீரினால் மூடப்பட்ட போக்குவரத்து வீதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக பல வீதிகள் நீரினால் மூடப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு புதூர் விமானப் படை தளத்திற்கு முன்பாக உள்ள ஆறு பெருகியமையால் ஆற்றுக்கு இடையாக செல்லும் வீதியில் நீர் ஊடறுத்துச் செல்வதால் போக்குவரத்து பெரும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு நகருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த வீதியையே மக்கள் பயன்படுத்துவதனால், தொழிலுக்கு, கல்வி கற்பதற்கும், ஏனைய தேவைகளுக்கும் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குள் நீர் பாய்ந்ததால் செயழிலந்த நிலையில் காணப்பட்டு, பின்னர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அதனை இயக்க வைத்து செல்கின்றனர்.
இவ்வீதியானது பள்ளமாக காணப்படுகின்றது. இவ்வீதியை உயர்த்தி இரு பக்கமும் அணையை கட்டி சீர் செய்து தந்தால் தங்களுக்கு மழை காலத்தில் எவ்வித இடையூறும் இன்றி பயனம் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
இதனால் பஸ் நிறுத்துவதற்கு தனியார் பஸ் நடனத்துனர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் உள்ளனர்.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பஸ் தரிப்பு நிலையத்திற்கு நீர் வராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பஸ் நடத்துனர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgp6.html
அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் திரிசங்கு நிலையில்...
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:42.06 AM GMT ]
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே தீரமானித்திருந்தன.
பொது வேட்பாளராக யார் போட்டியிட போகிறார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த இடதுசாரி கட்சிகள் இந்த தீரமானத்தை எடுத்திருந்தன.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளும் முன்னர் எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தெரியவருகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கோரி வருகின்றன.
பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் முன்னர் எடுத்த தீரமானத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் அஙகம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் இந்த விடயத்தில் திரிசங்கு நிலையில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgp5.html
உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்களை முகாமில் இருந்து விடுதலை செய்க: வேல்முருகன்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:41.14 AM GMT ]
இவர்களில் 25 பேர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தங்களது உயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்திருக்கிறார்கள் எனில் அவர்களது துயரமும், வலியும் மிகக் கொடூரமானது என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதில் ஈழத் தமிழர்கள் 26 பேர் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க கோரியும் வழக்குளை சட்டப்படி வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறியும் கடந்த 15–ந் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் தங்களது விடுதலைக்காக போராடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஈழ ஏதிலியர் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதே இந்தியாவில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லாத திபெத்திய அகதிகள் ஒரு தனிநாட்டுக்கான அத்தனை சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டின் 7 கோடி மக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களோ மிக மோசமான திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் இருக்கிறது.
திருச்சி மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து திறந்தவெளிச் சிறைச்சாலைகளான ஈழத் தமிழ் உறவுகள் இருக்கும் முகாம்களையும் இழுத்து மூடி அவர்களை சுதந்திர மனிதர்களாக நடமாட அனுமதிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு கொடுங்கைதிகளாக நடத்தப்பட்டு வரும் ஈழத் தமிழ் உறவுகளை சிறைகளில் இருந்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழ உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செய்து அவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgp4.html
Geen opmerkingen:
Een reactie posten