தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது….

கல்முனை மாநகர சபையில் முஸ்லீம் அரசியல் வாதிகளின் அடிதடி…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம்.ரியாஸ்க்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸே காயமடைந்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிஸ் காங்கிரஸை கண்டித்து உரையாற்றியதையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அடிதடி கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வானது இன்று மாலை மாநகரமுதல்வர் நிசாம் காரியப்பர் தலமையில் ஆரம்பமானது.KailMuni-SLMCKailMuni-SLMC-01KailMuni-SLMC-02
இதன்போது ஐ .மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம.றியாஸ் வீதிக்கு பெயர் வைப்பது தொடர்பான கருத்தினை முன்வைத்து உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அதனை ஏற்க மறுத்த மாநகர முதல்வர் அப்படியானவற்றை செய்யமுடியாது எனக்கூறியபோதே வாய்த்தர்க்கம் அதிகரிக்க ஆரம்பமானது.
பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம்கட்சியின் உறுப்பினர்களுக்கும் றியாஸிக்கும் இடையே கைகலப்பு மிகவும் உக்கிரமாக தொடர்ந்து கொண்டிருக்கும்போதே தனது ஆசனத்தினை தூக்கி ஆளும் தரப்பினருக்கு வீசியபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.பிரதௌஸஸின் தலையில் பட்டதுடன் அவரது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.


அதன்பின்னர் அங்கு நின்றவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவரை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். காயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
http://www.jvpnews.com/srilanka/88002.html

மைத்திரி-ரணில் இன்று கன்னி சந்திப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சி அமைப்பாளர்கள், மாவட்ட முகாமையாளர்ளக் மற்றும் மாகாண, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்க்கட்சித்தலைவருக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக இடம்பெறும் கன்னிசந்திப்பாகும்.
http://www.jvpnews.com/srilanka/88011.html

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது….

சுயாதீனமான தேர்தல்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் பொதுவான அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் எதிர்க்கட்சிக்கே கிடைக்கும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ இவ்வாறு ஆதரவு கிடைக்கும் என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். சரியாக சிந்திக்கும் தமிழ் வாக்காளர்கள் பொது வேட்பாளருக்கே ஆதரவளிப்பாளர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் சரத் பொன்சேகாவே வெற்றியீட்டியிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இ தேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டு சில தினங்களே ஆகின்றது எனவும், எதிர்காலத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/88013.html

Geen opmerkingen:

Een reactie posten