பிரிட்டன் அணுவிஞ்ஞானி யாழில்
http://www.jvpnews.com/srilanka/86735.html
ஜெயலலிதாவுக்கு சோனியா திடீர் அழைப்பு!
இதனால் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. அதற்கு, நேருவின் பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அந்த கட்சி, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்பி உள்ளார். இதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கோ, பா.ஜ.க. தலைவர்களுக்கோ, அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாநில கட்சிகளின் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.
http://www.jvpnews.com/srilanka/86748.html
மனித உரிமைகள் குறித்துப் பேச அனந்தி சசிதரனுக்கு அருகதையில்லை: ஷான் ராசமாணிக்கம்
மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஷான் ராசமாணிக்கம் சமகால நிகழ்வுகள் தொடர்பில் திவயின சிங்களப் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில் அவர் அனந்தி சசிதரனை கடுமையாக சாடியுள்ளார்.
அனந்தியின் கணவர் எழிலன் இராணுவத்தினரை மட்டுமன்றி சிவிலியன்களையும் படுகொலை செய்தவர். அப்போதெல்லாம் அனந்திக்கு மனித உரிமைகள் குறித்த உணர்வு இருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிட்டபோது அனந்தி போன்றவர்கள் எங்கிருந்தார்கள்?
இன்றைக்கு அனந்திக்கு சுவிட்சர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்றுவர எங்கிருந்து பணம் வந்தது? இதெல்லாம் அவருக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளாகும்.
மனித உரிமைகள் குறித்து குரல் எழுப்புவதன் மூலம் அனந்தி தன் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டுள்ளார். அதற்காக புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே அவர் இவ்வாறு நடந்து கொள்கின்றார்.
மேலும் ஜனாதிபதியின் நற்பெயரைக்கெடுப்பதற்கும், நாட்டின் அபிவிருத்தியை சீர்குலைக்கவும் அனந்தி முயற்சிக்கின்றார் என்றும் ஷான் ராசமாணிக்கம் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/86744.html
Geen opmerkingen:
Een reactie posten