தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

தும்புத்தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பக்தா் - கோயில் கூட்டத்தில் சண்டை !

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் இரவு இடம் பெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தின் போது, நிர்வாகத்தை தாறுமாறாக விமா்சித்த பக்தா் ஒருவா் நிர்வாகசபை உறுப்பினா் ஒருவரால் தும்புக்கட்டை கொண்டு தாறுமாறாக தாக்கப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இடம் பெற்ற இச் சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் அமிர்தலிங்கம் வயது 41 என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆவார். ஆலய நிர்வாகத்தில் உள்வா்களின் அடாவடிகளையும், ஊழல்களையும் பற்றி இவா் கதைத்துக் கொண்டிருந்த போது இவா் ஆலய நிர்வாகசபை, உறுப்பினா் ஒருவரால் அருகில் இருந்த வாசிகசாலையில் வைத்திருந்த தும்புத் தடியைக் கொண்டு தம்மை, நையப்புடைத்ததாக அமிர்தலிங்கம் தெல்லிப்பளைப் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
அமிர்தலிங்கம் என்றாலே பிரச்சனையான பெயர் தான் போல இருக்கு. ஆனால் இந்த அமிர்தலிங்கம் கொஞ்சம் நல்லவர் போல இருக்கு. ஏன் என்றால் கோயில் நிர்வாகசபையில் நடக்கும் குளறுபடிகளை தட்டிக்கேட்டுள்ளார் அல்லவா ?
http://www.athirvu.com/newsdetail/1382.html

Geen opmerkingen:

Een reactie posten