தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட இலங்கை அகதிகள் வைத்தியசாலையில்!

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதத்த்தில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களில் 23 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்க்கின்றன.
ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 7 பேர் திடீரென மயக்கமுற்ற நிலையில், திருச்சி அரச மருத்துவமனையில் நேற்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர், சுகவீனமுற்ற மேலும் 17 பேர் நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ள போதிலும், ஏனைய 23 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவாறு, தமது போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டுவருவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 26 இலங்கையர்கள் உள்ளிட்ட 31 பேர் கடந்த 15 ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது வழக்குகளை சட்டப்படி நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu5.html

Geen opmerkingen:

Een reactie posten