தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

மேய்ச்சல் நிலத்தை பெரும்பான்மையினருக்கு வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

பொது வேட்பாளர் சந்திரிக்கா அல்லது கரு ஜயசூரிய!– நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 09:27.09 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பல எதிர்க்கட்சிகளும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் சில முக்கியமான பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொது வேட்பாளரின் வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் அடங்கிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சிகள் நாளை கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.
பொது வேட்பாளராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்கள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக இந்த விடயத்துடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியினர் இதனை எதிர்த்த போதிலும் அது வெறும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டமாக சுருங்கியுள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் சிரால் லக்திலக்க ஆகியோர் பொது வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.
சந்திரிக்கா அல்லது கரு ஜயசூரிய பொது வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேரடியான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் ஜாதிக ஹெல உறுமயவும் இதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வது சுயாதீன ஆணைக்குழுக்கள செயற்பட வைப்பது போன்ற ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் பொது வேலைத்திட்டம் மற்றும் உடன்படிக்கையில் இணைவது பற்றி ஜே.வி.பி இதுவரை தீர்மானங்களை எடுக்கா விட்டாலும் அதற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த விடயம் சம்பந்தமான தீர்மானத்தை ஜே.வி.பி இன்று அறிவிக்கும் என அறியகிடைத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொது வேட்பாளராக போட்டியிடவோ அல்லது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளரை ஆதரிக்கவோ முன்வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷ இழந்து விடுவார் என்பது இங்கு முக்கியமான அம்சமாக இருக்கும்.
மகிந்த ராஜபக்ச பலவந்தமாகவும் கபடத்தனமான சூழ்ச்சியின் மூலமுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றியதாக சுதந்திரக்கட்சியினர் எண்ணுகின்றனர்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியில் மற்றும் ஏனைய சிறிய கட்சிகளில் இருந்து பணம் மற்றும் பதவிகளை கொடுத்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப்பட்ட ஒரு சிறிய தரப்பினரே மகிந்த ராஜபக்சவிடம் எஞ்சியிருப்பர் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXep5.html

நுவரெலியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு- மீட்பு பணிகளை தொடர வேண்டுமென மீரியபெத்த மக்கள் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 09:29.43 AM GMT ]
நுவரெலியா மாவட்டத்தில் நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளதாக அந்த மாவட்ட அரசாங்கம் அதிபர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் மாத்திரம் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள இடங்களில் இருந்து 600 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமான .இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரம்பொடை, வெவன்டன், ஹங்குராங்கெத்த எழமுல்ல, வலபனை முல்லகலை, நுவரெலியா, கந்தபளை, ராகலை தியனில்ல, ஹட்டன், சமனலகம, பொகவந்தலாவை கிவ் தோட்டம், மற்றும் மஸ்கெலியா காட்மோர் ஆகிய பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள இந்த குடும்பங்கள் 22 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகளை தொடர வேண்டுமென மீரியபெத்த மக்கள் கோரிக்கை
மீரியாபெத்த மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுகொள்ள முடியாதெனில், மண்சரிவின் மீட்பு பணிகளை தொடர வேண்டும் என்று மீரியாபெத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருமாத காலத்தினுள் மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே மீட்பு பணிகளை நிறுத்துமாறு கோரியதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
எனினும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள 2 வருடங்களேனும் செல்லும்.
இதனால் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட நிதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், இந்த மீட்பு பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மீட்பு பணிகளுக்கு பொறுப்பான மத்திய மாகாண படைப்பிரிவின் தளபதி மனோ பெரேராவை கேட்ட போது, இராணுவத் தலைமைகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் இங்கு மீட்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை என்று கூறினார்.
இதேவேளை மீரியாபெத்த மக்கள் முன்வைக்கும் கோரிக்கை தொடர்பில் அனர்த்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவை கேட்டபோது,
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXep6.html
மேய்ச்சல் நிலத்தை பெரும்பான்மையினருக்கு வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 10:50.45 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் தரை காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கு விவசாயத்துக்கு வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈரலக்குளம் ஏ கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மாதவன, மயலத்தன்மடு, மாந்திரிஆறு ஆகிய பகுதிகளில் கால்நடை மேயச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் காணிகளை அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையின விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் கடந்த 4ஆம், 05ஆம், 06ஆம் திகதிகளில் வனபரிபாலன திணைக்களத்தினால் ஜி.பி.எஸ்.மூலம் நில அளவை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மேய்ச்சல் தரைக்காணிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படும்.
அப்பகுதிகளில்உள்ள இராணுவத்தினரின் உதவியுடனும் சில சிங்கள அரசியல்வாதிகளின் உதவியுடனும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 150,000 கால்நடைகள் மேய்ச்சல் தரைக்காணிகளையே சிறுபான்மை மக்கள் நம்பியுள்ளனர். பல ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பாளர்கள் இப்பகுதியிலேயே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் இந்த விடயம் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துரையாடிய போதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினோம்.
குறித்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணி வழங்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeqy.html

Geen opmerkingen:

Een reactie posten