ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சர் ரோஹித பகிரங்க எச்சரிக்கை! - எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 11:41.44 PM GMT ]
நேற்றைய தினம் களுத்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அபேகுணவர்த்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் அபேகுணவர்த்தன மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியைத் துரோகி என்று வர்ணித்துள்ள ரணில் விக்கிரமசிங்க என் கையில் கிடைத்தால் இனி அவர் பேசவே முடியாதபடி வாயின் இரண்டு பக்கமும் கத்தியால் கிழித்து ஊனப்படுத்தி விடுவேன், இல்லாவிட்டால் அவரது முகத்தை மண்ணில் ஊன்றித் தேய்த்து சிதைத்து விடுவேன்.
ஜனாதிபதிக்கு நாங்கள் மனப்பூர்வமாக அன்பு செலுத்துகின்றோம். அவரை திட்டுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்
எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் கடுமையான அச்சுறுத்தல் வழிமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக முன்னின்றவர்கள் தற்போது தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். ஒருசிலருக்கு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் நேரடி அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒப்பந்தம் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அதனை சீர்குலைத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் தடுப்பதில் அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் குறித்து அலட்டிக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள், குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதில் உறுதியான முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்த கோட்டே பார்க் ஸ்ட்ரீட் மீவ்ஸ் ஹோட்டல் நிர்வாகம் எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடலுக்கு இடமளிக்க மறுப்புத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி தரப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது கலதாரி ஹோட்டலில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. கலதாரி ஹோட்டல் ஜனாதிபதி செயலகத்துக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் மிக அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkw4.html
விடுதலைப் புலி சந்தேக நபரை விடுதலை செய்ய அரசாங்கம் மறுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 11:27.59 PM GMT ]
போர்க்குற்ற சாட்சியங்களுக்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் வவுனியாவில் வைத்து கிருஷ்ண ராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரை விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் ராத் ஹுசைன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் அரசாங்கம் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளது.
கிருஷ்ணராஜாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkw2.html
Geen opmerkingen:
Een reactie posten