தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

மு.கா. - தமிழ்க் கூட்டமைப்புடன் எதிரணியினர் செய்த உடன்படிக்கை என்ன? வெளியிடுங்கள்!- பொதுபலசேனா!

துறைசார் அமைச்சர் இன்றி வரவு செலவுத் திட்ட விவாதம்!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 04:42.12 AM GMT ]
11 அமைச்சுக்கள் தொடர்பிலான வரவு செலவுத் திட்ட விவாதங்கள் இன்று நாடாளமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.
இதில் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சின் நிதி ஒதுக்கீடு குறித்தும் விவாதம் செய்யப்பட உள்ளது.
இந்த அமைச்சிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்தார்.
இதன் காரணமாக துறைசார் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவரது பிரசன்னமின்றி தொழில்நுட்ப ஆய்வு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது.
பெரும்பாலும் இன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அமர்வுகளில் பங்கேற்க மாட்டார் எனத்தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த துறைக்கான சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பதவி வகிப்பதாகவும் விவாதத்தில அவர் பங்கேற்பார் எனவும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நேற்று பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYio5.html
சிரேஸ்ட அமைச்சர்கள் உதாசீனம் செய்யப்படுகின்றனர்: சுனில் ஹந்துநெத்தி
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 05:18.37 AM GMT ]
சிரேஸ்ட அமைச்சர்கள் உதாசீனம் செய்யப்படுவதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஸ்ட அமைச்சர்கள் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களை விடவும் தரம் தாழ்ந்த நிலையில் நடத்தப்படுகின்றனர்.
ஜனாதிபதியின் பயணச் செலவுகளுக்காக 2500 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் சிரேஸ்ட அமைச்சர்களுக்கு 500 மில்லியன் ரூபா ரூபா நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிரேஸ்ட அமைச்சர்களின் அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்ற செயற்குழுக்களை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYio6.html
மு.கா. - தமிழ்க் கூட்டமைப்புடன் எதிரணியினர் செய்த உடன்படிக்கை என்ன? வெளியிடுங்கள்!- பொதுபலசேனா
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 05:24.02 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் நடத்­தப்பட்ட பேச்­சு­வார்த்­தை­களின் விப­ரங்­களையும் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் மற்றும் நிபந்­த­னைகள் என்­ன­வென்­பதையும் அரசு தரப்­பி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் நாட்­டுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா கோரியுள்ளது.
கொழும்பில் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு உரை­யாற்­றிய பொது­ப­ல­சே­னாவின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்;
ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரச தரப்பை சார்ந்த சிலரும் எதிர்க்­கட்­சியை சார்ந்­த­வர்­களும் நாட்டில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­தேச சதி­கா­ரர்­க­ளுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரு­டனும் முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர். சில நிபந்­த­னை­க­ளையும் ஏற்­றுக்­கொண்டு உடன்­ப­டிக்­கை­க­ளையும் செய்து கொண்­டுள்­ளனர்.
எனவே நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் என்ன? நிபந்­த­னைகள் என்ன? செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் என்­ன? ­ என்­பது தொடர்பில் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.
இந்­நாட்டின் தலை­வர்கள் யாரென்­பதை சிறு­பான்­மை­யின அர­சியல் கட்­சிகள் தீர்­மா­னிக்கும் காலம் மலை­யேறி விட்­டது. இனி ஒரு­போதும் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம்.
இந்­நாட்டின் தலை­வரை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக பொது­ப­ல­சேனா உரு­வாகி விட்­டது. சிங்­கள பெளத்­தர்­களே இந்­நாட்டை ஆள வேண்டும்.  அதனை நாமே தீர்­மா­னிப்போம்.
எனவே அரச தரப்­பி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் சிங்­கள பௌத்­தர்­களை காட்­டிக்­கொ­டுக்கும் வர­லாற்றுத் தவறை செய்­வ­தற்கு முன்­வ­ரக்­கூ­டாது.
இங்கு பொது வேட்­பாளர் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. தேசிய தலை­மைத்­து­வமே எமது இலக்­காகும்.
சிங்­கள பௌத்­தர்­களை யார் பாது­காக்­கின்­றார்­களோ அவர்­க­ளுக்கே எமது ஆத­ரவு.
அவ்­வாறு இல்­லா­விட்டால் எமது கையில் தேசிய வேட்­பாளர் இருக்­கிறார். தக்க தரு­ணத்தில் கள­மி­றக்­குவோம்.
அதற்­காக விசே­ட­மாக அர­சியல் குழு­வொன்றை நிய­மித்­துள்ளோம். எதிர்க்­கட்­சி­யான ஐ.தே.கட்­சிக்கு இன்று தலை­மைத்­துவம் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.
எனவே தான் பொது வேட்­பா­ளரை தேடி ஓடு­கி­றது. இவ்­வாறு எதிர்க்­கட்­சியின் நிலை தொடர்ந்தால் விலாசம் இல்­லாமல் போய்­விடும்.
சிங்­கள பௌத்­தர்­களின் உரி­மைகள் பாது­காப்பு பறி­போ­வதை எதிர்த்து கடந்த காலங்­களில் நாம் போரா­டினோம்.
ஹலால் பிரச்­சினை, வில்­பத்­துவில் காடுகள் அழிப்பு, காணிகள் பறி­முதல் ஷரிஆ வங்­கிகள் என பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்தோம்.
ஆனால், இவை தொடர்பில் ஆளும் தரப்­பி­னரோ, எதிர்த்­த­ரப்­பி­னரோ எவரும் குரல் கொடுக்­க­வில்லை மௌனம் சாதித்­தனர்.
இன்று ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட உள்ள நிலையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க வேண்டும். ஊழல் மோச­டி­களை ஒழிக்க வேண்டும். குடும்ப அர­சி­ய­லையே ஒழிக்க வேண்டும் என தேசிய பிரச்­சி­னை­களை உத­றித்­தள்ளி விட்டு அவற்­றிற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­காமல் வழ­மை­யான அர­சியல் விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றனர்.
யுத்த காலத்தில் பிர­பா­க­ரனைப் பார்த்­துக்­ கொண்டு தேசிய பிரச்­சி­னை­களை மறந்தோம். ஆனால், இன்று பிர­பா­கரன் இல்லை. எனவே, தேசிய பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுப்போம்.
சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை இங்கு உருவாக்குவோம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
வேட்பாளரை நிறுத்த மூன்று அரசியல் கட்சிகளிடம் பேசும் பொதுபல சேனா
சிங்கள பௌத்த வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தீர்மானிக்கும் கட்டியெழுப்பும் பலம் சிங்கள பௌத்தர்களிடம் உள்ளது. அதற்கான வாக்கு பலம் பொதுபல சேனாவிடம் இருக்கின்றது.
அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடாத பல சிங்கள, தமிழ், முஸ்லிம் அமைப்புகள் பொதுபல சேனாவுடன் கைகோர்த்துள்ளன.
பொதுபல சேனா அமைப்பிடம் இருக்கும் வேட்பாளர் யார் என்பது பற்றி தற்போது அறிவிக்க போவதில்லை. தேர்தல் நடைபெறும் திகதி வெளியிடப்பட்டதும் அவர் யார் என்பது பகிரங்கப்படுத்தப்படும்.
மேலும் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி ஒன்று தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் அந்த பணியை ஐக்கிய தேசியக் கட்சி செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.
மக்களை வெற்றியடைய செய்யும் அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ இன்னும் நாட்டில் உருவாகவில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYio7.html

Geen opmerkingen:

Een reactie posten