தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 november 2014

ஆடாவடி ஆசாமியாக மாறியுள்ள அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் திசர சமரசிங்க !

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான நூல் ஒன்று பிரசூரிக்கப்படுவதனை தடுக்க, அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவினால் இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மற்றும் அதற்கான சாட்சியங்கள் தொடரில் இந்த நூலில் விரிவாக விபரிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 'இலங்கையின் இரகசியங்கள்' என்ற பெயரில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
நூல் வெளியீட்டுக்கான அதரவினை வழங்கி வரும் மெல்பர்னின் "மொனாஸ்" பல்கலைக்கழகத்திற்கு தனிப்பட்ட ரீதியில் ஆழுத்தங்களை பிரயோகித்து ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு திசர சமரசிங்க கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் முன்னணி ஊடகவியலாளர் ட்ரவர் கிரான்ட்டினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப் படையினர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் நூலில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது. மொனாஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் மார்கிரட் கார்ட்னர் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர் நிர்வாகத்தினரை சந்தித்து சமரசிங்க நூல் பற்றி எடுத்துக்கூறி பிரசூரத்தை தடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
நூலை எவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவு செய்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளாராம் .. மெல்பர்னில் இயங்கி வரும் மொனாஸ் பல்கலைக்கழகத்திற்கும் கொழும்பில் அமைந்துள்ள மொனாஸ் கல்லூரிக்கும் இடையில் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. நூலாசிரியர் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், நூல் தொடர்பிலான தணிக்கைகளையோ பிரசூரிப்பதற்கு தடையையோ விதிக்க முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் அபிட் கான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கருத்துச் சுதந்திரம் கிடையாது எனவும், மொனாஸ் பல்கலைக்கழக நிர்வாகம் நூலை பிரசூரிப்பதற்கு எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவுஸ்திரேலிய தமிழ் புகலிடப் பேரவையின் அழைப்பாளர் ஹரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1460.html

Geen opmerkingen:

Een reactie posten