மைத்திரிபால சிறிசேன அரசியலில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர் எனவும் இதனால் அவர் கட்சிக்கு திரும்பி வர மாட்டார் என்பதால், கட்சியில் இருக்கும் நபர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆளும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ராஜித சேனாரத்னவும் மைத்திரிபால சிறிசேனவும் தனது தந்தையின் மரணத்தின் போதும் மரணத்தின் பின்னரும் தனது தந்தைக்காக அச்சமின்றி குரல் கொடுத்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒருவர், இருவர் என அனைவரும் சென்று விட்டால் கட்சியில் ஹெரோயின்கார்கள், எத்தனோல் காரர்கள், கொள்ளைக்காரர்கள், வியாபாரிகள் மாத்திரமே எஞ்சியிருப்பர்.
இப்படி அனைவரும் கட்சியை விட்டுச் சென்று விட்டால் உண்மை நீல இரத்தம் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை தேடிக்கொள்ளவும் முடியாது.
இது எமக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும் காலம். சங்க, வைத்திய, குரு, விவசாயி, தொழிலாளர் என்ற பஞ்ச கொள்கை சுதந்திரக் கட்சிக்கு இருந்தது.
தற்போது என்ன நேர்ந்துள்ளது. தூள், எத்தனோல், கொலை, ஊழல், மோசடி, கெமிஷன் போன்ற விடயங்களுடன் தொடர்புடைய புதியவர்கள் கட்சிக்குள் வந்துள்ளனர். இதன் காரணமாகவே எம்மிடம் இருந்த சிறந்த மனிதர்கள் எம்மை விட்டு செல்கின்றனர் எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிடடுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfrz.html
Geen opmerkingen:
Een reactie posten