தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

சட்டரீதியான அகதிகளை பாதுகாக்க அவுஸ்திரேலியா தவறியுள்ளது!

திருகோணமலை, வெருகலில் பௌத்த பிக்குவின் ஆக்கிரமிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 01:24.50 AM GMT ]
திருகோணமலை, வெருகல் கல்லடி கிராமத்தில் பல வருடங்களாக தமிழர்களால் முன்பள்ளியாக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அருகில் உள்ள பௌத்த விகாரையின் புனரமைப்புக்காக குறித்த கட்டிடம் தேவை என்று கூறியே பௌத்த பிக்கு பிரச்சினையை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்பள்ளிக்கு கடந்த வெள்ளிக்கிழமையும் வழமையாக தமது பிள்ளைகளை கூட்டிச்சென்ற பெற்றோரை உள்ளே செல்லவிடாது குறித்த பிக்கு வாசலை மறித்து பிரச்சினையை உருவாக்கியுள்ளார்.
குறித்த கட்டிடம் பௌத்த விகாரைக்கு உரியது என்றும் அவர் உரிமை கோரியுள்ளார்.
இதனையடு;த்து பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து பிக்குவின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கட்டிடம், பௌத்த விஹாரைக்கு உரியது அல்ல என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது வெருகல் பொலிஸ் மற்றும் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பொதுமக்களுடன் முரண்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXfx3.html
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் சோபித தேரருக்கு ஆதரவளிக்கத் தயார்!- ஹசன் அலி - பௌத்த பிக்கு ஒருவருக்கு ஆதரளிக்கப் போவதில்லை!– சுரேஸ் பிரேமசந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:02.13 AM GMT ]
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் மாதுலுவே சோபித தேரருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
சோபித தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் எமது மக்கள் சந்தேகமின்றி ஆதரவளிப்பார்கள்.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வந்தால் ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும்.
சோபித தேரர் என்று விசேடமில்லை.
பௌத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.
மௌலவிää குருக்கள் அல்லது பௌத்த பிக்கு என்ற காரணத்தினால் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிராகரிக்க மாட்டார்கள்.
எனினும் நாட்டில் தமிழர் ஒருவரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது.
இது எழுதப்படாத விதியாகும்.
எனவே, சிறுபான்மை மக்கள் எந்தநாளும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக உரிய முறையில் ஆட்சி செய்யக் கூடிய ஒருவரை முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவருக்கு ஆதரளிக்கப் போவதில்லை!–  சுரேஸ் பிரேமசந்திரன்
பௌத்த பிக்கு ஒருவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி திட்டவட்டமாக அறிவிக்க முடியாது.
சோபித தேரரோ அல்லது வேறும் ஒரு பௌத்த பிக்குவோ போட்டியிட்டால் அவருக்கு ஆதரளிக்கப் போவதில்லை.
ஏனெனில், பௌத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பௌத்த தர்ம நெறிகளின் அடிப்படையில் அவர் செயற்படுவார்.
அவ்வாறான ஓர் நிலைமையில் ஏனைய மதத்தவர்களின் நிலைமை என்ன.
யார் ஜனாதிபதியாகின்றார் என்பது எமக்குப் பிரச்சினையில்லை. குருக்களா, மௌலவியா அல்லது பௌத்த பிக்குவா என்பதில் பிரச்சினையில்லை.
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய ஒருவரையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
நான் நினைக்கவில்லை பௌத்த பிக்கு ஒருவருக்கு தீர்வு வழங்கப்பட முடியும் என.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கக் கூடிய ஒருவரையே நாம் ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரிப்போம்.
இதுவரையில் அவ்வாறு பொருத்தமான ஓர் வேட்பாளர் கிடைக்கவில்லை எனவும், பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXfx5.html
சட்டரீதியான அகதிகளை பாதுகாக்க அவுஸ்திரேலியா தவறியுள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:34.53 AM GMT ]
சட்டரீதியான அகதிகளை அவுஸ்திரேலியா பாதுகாக்க தவறியுள்ளதாக மனித உரிமைகள் குழுக்களும், அரசசார்ப்பற்ற அமைப்புக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தக்குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை 77 அரச சார்பற்ற அமைப்புக்கள் உறுதி செய்துள்ளன.இதன் படி அவுஸ்திரேலியா அரசாங்கம் மனித உரிமை கொள்கைகளை மீறிச்செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தரவுகளின்படி அந்த நாட்டுக்கு படகுகள் மூலம் வந்த 50 வீதமான இலங்கையர்கள் தம்மை அகதிகள் என்று அடையாளப்படுத்தியே வந்தனர்.
எனினும் அவுஸ்திரேலியா அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்று குறித்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXfx6.html

Geen opmerkingen:

Een reactie posten