[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 11:29.06 PM GMT ]
மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் ASSeTTS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக கிரிக்கட் விளையாடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தமிழ் இளைஞர்களின் முயற்சியால் முதல் முறையாக கிரிக்கட் அணி- ASSeTTS CRICKET CLUB- – உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கிரிக்கட் அணியின் நிறுவுனராக கபில் தேவ் இருந்ததோட, அவரே தற்போதைய அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர்கள் தற்போது LAST MAN STAND என்னும் சர்வதேச ரீதியிலான சுற்றுப்போட்டி ஒன்றில் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு அவுஸ்திரேலியா பிராந்தியத்துக்குள் நடைபெற்று வருகிறது.
இங்கு வெற்றி பெற்ற பின் சிட்னியில் ஒரு சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது அங்கும் வெற்றி பெற்றால் அவர்கள் தென்னாபிரிக்காவில் நடைபெறும் இறுதிக் கிண்ணத்தில் ஆட முடியும்.
பிராந்திய மட்டத்தில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் இவர்கள் வெற்றி பெற்று தர வரிசையில் முதலாவதாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
தனிப்பட்ட துடுப்பாட்ட தரவரிசையில் முதலாவது உட்பட முதல் பத்துக்குள் இந்த அணியின் மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர், அதே போல் பந்து வீச்சிலும் முதல் பத்துக்குள் இரண்டு பந்து வீச்சாளர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களின் குறுகிய கால வளர்ச்சியை கண்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இவர்களுக்கு விருது வழங்க இருப்பது முக்கியமான ஒரு விடயம் ஆகும்.
இதில் சிறப்பான விடயம் என்னவெனில் இவர்கள் அனைவரும் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற தமிழ் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex7.html
இலங்கை அரசியலில் நிகழவுள்ள பல்வேறு மாற்றங்கள்?
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 11:44.06 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில், கட்சி தாவல்கள், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜாதிக ஹெல உறுமயவின் அறிவிப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன.
சிங்கப்பூருக்கு சென்றிருக்கின்ற அவர், ஞாயிற்றுக்கிழமை நாடுதிரும்பி, நேற்று திங்கட்கிழமை அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என்று பரவலாக பேசப்பட்டபோதும் மங்கள சமரவீர எதிர்வரும் வியாழக்கிழமை (13) நாடுதிரும்ப விருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKYnoy.html
மீனவர் மரண தண்டனை: மஹிந்தவுடன் பேசினாரா மோடி? - இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்ச ஒப்புதல்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 12:44.26 AM GMT ] [ பி.பி.சி ]
மாறாக இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அது சொல்லியிருக்கிறது.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஞாயிறன்று தொலைபேசியில் பேசியதாக பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் சயத் அக்பருதீனிடம் விளக்கம் கோரப்பட்ட போது, அவர் இந்த தகவலை மறுக்கவுமில்லை, உறுதிசெய்யவும் இல்லை.
5 இந்திய குடிமகன்களை இந்தியாவிற்கு பத்திரமாக திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையுமே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு ஒரு சுமுகமான தீர்மானம் இதுவரை எட்டவில்லை.
இது ஒரு முக்கியமான, சிக்கலான, உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் நாங்கள் ஒரு சுமூகமான தீர்மானத்தை எட்டிய பிறகு நாங்கள் அதைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்போம்." என வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் சயத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தன், இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், எனினும் சட்ட ரீதியில் மட்டுமல்லாமல் மற்ற வகையிலான நடவடிக்கைகளையும் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்ச ஒப்புதல்
போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசும் மீனவர்களை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
இது தொடர்பாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் பற்றி பேசியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இரவு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் துரித நடவடிக்கை எடுத்ததாக தெரிய வருகிறது. ராஜபக்ச ஒப்புதலால் மீனவர்கள் விரைவில் இந்திய சிறைக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnoz.html
Geen opmerkingen:
Een reactie posten