ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என மகிழ்ச்சியில் இருந்த ராஜபக்ஷவினர், அவர் போட்டியில் இருந்து விலகி பொது வேட்பாளரை நிறுத்த போவது உறுதியானதால் ராஜபக்ஷவினர் பெரும் குழப்பத்தில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதனால், எப்படியாவது தேர்தலில் வென்றாக வேண்டும் என்பதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு ராஜபக்ஷவினருக்கு மிக நெருக்கமானவரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்கவை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்த ராஜபக்ஷவினர் தயாராகி வருகின்றனர்.
இதனடிப்படையில் இலங்ககோனை மூன்று மாத மேலதிக பயிற்சிகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு, விக்ரமசிங்கவை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்து தேர்தலை நடத்த திட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ராஜபக்ஷவினருக்கு சார்பானவராக இருந்தாலும் அவரை கொண்டு முழுமையாக சட்டத்தை மீறி செயற்பட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது என்பதை ராஜபக்ஷ அரசாங்கம் அறிந்துள்ளது.
இதனால், முதல் கட்டமாக கொலை குற்றம் தொடர்பில் தவறை பொறுப்பேற்று பதவி விலகிய பின்னர் வெளிநாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய பொலிஸ் துறைக்கான சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பொது வேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் சந்திரிக்கா தீவிரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவலை கொழும்பின் ஊடகத் தகவல்கள் உறுதிசெய்துள்ளன.
வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்த பணிகளில் ஈடுபட்டு வருவதை அவரை சார்ந்த தரப்புக்களும் உறுதிசெய்துள்ளன.
எனினும் அவர் பொதுவேட்பாளராக போட்டியிடுவாரா? என்பது தெரியவரவில்லை.
இந்தநிலையில் எதி;ர்க்கட்சிகளும் பொது வேட்பாளர் ஒருவரை தெரிந்தெடுக்கும் நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfq2.html
Geen opmerkingen:
Een reactie posten