தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

ஜெனிவாவிற்கு ஓடுகிறது அரச உயர்மட்டம்!

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டமா?? JVP

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தில் ஜே.வி.பி குதிக்கலாமென்ற சாரப்பட வெளியான செய்தி திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்ட ஒன்றாகும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டில் நிலவிய மோசமான பொருளாதார நிலை மக்களை போராட்டத்திற்கு தள்ளியது. தற்போது அதே போன்று மோசமான பொருளாதார நெருக்கடியினை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அவ்வகையில் மக்களை அணிதிரட்டி அவர்களது உரிமைகளிற்காக போராவேண்டிய தேவை எமக்குண்டு.
ஆனால் அது ஆயுதப் போராட்டமென நாம் கூறியிருக்கவில்லை.அவ்வாறான எண்ணமும் எம்மிடம் இல்லையென அவர் தெரிவித்தார்.
வடக்கு-கிழக்கு மக்கள் மிகமோசமான அடக்கு முறைகளிற்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். அதே போன்று 28 ஆயிரம் சிறார்கள் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கப்பட்டு உள்ளனர். அரைவாசிக்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு இருக்க வீடேயில்லை. இவை அனைத்தையும் மூடி மறைத்து மக்களை திசைதிருப்ப களியாட்ட விடுதிகளையும் கார்ப்பெட் வீதிகளையும் இலங்கை அரசு அள்ளிவீசுகின்றது. அத்துடன் மக்களை ஊடகங்களை அது அடக்கி ஆளுகின்றது.
இவற்றைப் பேசவேண்டிய கூட்டமைப்போ வேடிக்கை பார்ப்பதன் மூலம் அரசிற்கு முண்டு கொடுக்கின்றது. வடமாகாணசபை கூட்டமைப்பிடமுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் 80சதவீதமானவையும் அவர்களிடமேயுள்ளது. ஆனால் வெறும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து செய்வதை ஏன் அவர்களால் செய்யமுடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வடக்கிற்கு நாம் வருவதை தடுக்க இலங்கை அரசு பலத்த முயற்சிகளை செய்கின்றது. ஊடக மாநாட்டை நடத்தக்கூடாதென ஊடக அமையத்தை தமது தனது இராணுவப்புலனாய்வு பிரிவு மூலம் மிரட்டுகின்றது. எமது கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளரது வீட்டிற்கு சென்று திரும்பியவுடன் அதே போன்று புலனாய்வு பிரிவினர் போய் மிரட்டுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வூடக மாநாட்டில் அவருடன் அவர்களது கட்சியின் ஒரு பிரிவான சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் இராஜேந்திரன் ,யாழ்.அமைப்பாளர் அம்பலவாணர் கணேஸ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
http://www.jvpnews.com/srilanka/86962.html

பொது வேட்பாளர் விடயத்தில் குழப்பத்தில் எதிர்க் கட்சிகள்….

எதிரணியின் பொது வேட்பாளர் யார் என அரசாங்கம் கேள்வியெழுப்புவதும், தேர்தலை அறிவித்தால் வேட்பாளரை அறிவிக்கிறோம் என எதிரணியும் தெரிவித்து வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சி மட்டத்திலான ஆதரவும் பெருகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள சஜித் பிரேமதாச தற்போதைய நிலையில் தேர்தலில் போட்டியிடும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள அதேவேளை தனக்குப் பின் சஜித் போட்டியிட வேண்டும் என ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் அதேவேளை கட்சியின் சிரேஸ்ட தலைவர் கரு ஜயசூரிய பொதுவேட்பாளராவதில் ஜே.வி.பியும் இணங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.BUP_DFT_DFT
http://www.jvpnews.com/srilanka/86966.html

மகிந்தவின் கதைக்கு சொல்ஹெய்மின் அறிக்கை நாளை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/86972.html

ஜெனிவாவிற்கு ஓடுகிறது அரச உயர்மட்டம்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி உயர்மட்டப் பிரதிநிதிகள் சயிட் அல் ஹுசெய்னிற்கு விளக்கம் அளிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் பற்றிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.
http://www.jvpnews.com/srilanka/86976.html

Geen opmerkingen:

Een reactie posten