[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 09:51.17 AM GMT ]
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார தொடர்புகள் சம்பந்தமான ஆணைக்குழு இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி பராக் ஒபாமா, துணை பிரதிநிதி பதவிக்கு சிசனை பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக தொடர்ந்தும் அவர் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYht7.html
அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 10:09.45 AM GMT ]
மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் அமைச்சர் ராஜித சேனாரத்தின,
இதற்கிடையே ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.
இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது
நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவின் செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ளனர்.
Video bbc
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அர்ஜூன ரணதுங்க, வசந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானே பொது வேட்பாளர் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக முழு நாட்டுக்கும் அறிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக தெரிவு செய்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhuz.html
ஐ.தே.கவின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன! ஜனாதிபதியானால் ரணில் பிரதமர்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 10:12.51 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜீ20 குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Video bbc
பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் ஆதரவளிப்பதாக ஜீ20 குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால சிறிசேன
தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன்.
அமைச்சராக பதவி வகித்த போது இவ்வளவு அழுத்தங்கள் என்றால் நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்குவார்கள் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பராவாயில்லை நாட்டு மக்களுக்கு நன்மை செய்யுமாறு மனைவி பிள்ளைகள் கோரியிருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வேன். 17ம்திருத்தச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்துவேன்.
நிறைவேற்று அதிகாரத ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் ரத்து செய்வேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- மைத்திரிபால சிறிசேன
நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை எண்ணி தேசிய மருந்து கொள்கை ஒன்றை கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்தேன் ( கண்களில் கண்ணீர்). ஆனால் முடிவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை 100 நாட்களுக்கு ஒழிக்க எனக்கு அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோருகிறேன்.
நாட்டு மக்கள் வாழ்வதற்கு சிறந்த பொருளாதாரம் இல்லை. நான் அங்கம் வகிக்கும் பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
நான் பொது வேட்பாளராக போட்டியிடுவேன். முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சுதந்திரமான ஊடகம், ஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என்பதை எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு தெரியும். ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தேர்தல் அதிகாரத்திற்கு வரும் எமது அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றேன். ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான சமூகத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளேன்.
17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும்.
எனது இந்த பயணத்திற்காக உதவிய சகோதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரத்ன தேரர், சோபித தேரர் உட்பட அனைவருக்கும் கௌரவமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது.
எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காக நாளுக்கு நாள் நாங்கள் அடியெடுத்து வைப்போம். மக்களின் பிரார்த்தனை நிறைவேற அர்ப்பணிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் குறித்து ஞாபகப்படுத்த விரும்புகிறேன் (கண்களில் கண்ணீர்).
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் கௌரவமான வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhu0.html
Geen opmerkingen:
Een reactie posten