[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 07:19.12 AM GMT ]
காலியில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தன்னை கவனத்தில் கொள்வதில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கமும் அதன் தலைவர்களும் எனக்கு உரிய உபசரிப்பை வழங்குவதில்லை.
அவர்கள் எனது சேவையை கவனத்தில் கொள்ளாது புறந்தள்ளியுள்ளனர். நான் கடந்த 26 ஆண்டுகளாக காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக சேவையாற்றியுள்ளேன்.
நான் கட்சிக்காக செய்யாதது எதுவுமில்லை. கட்சிக்காக சிறைக்கு சென்றிருக்கின்றேன். எனினும் அநீதியான முறையிலேயே என்னை நடத்துகின்றனர்.
எப்படி இருந்தாலும் தடைகள், சவால்களுக்கு மததியில் மக்களுக்கான சேவை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று உறுதியளிக்கின்றேன் என பியசேன கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்த விலகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பட்டியலில் பியசேன கமகேவின் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgqz.html
சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மாவட்ட அமைப்பாளராக சிறிபால கம்லத் நியமிப்பு
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 08:13.13 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மாவட்ட புதிய அமைப்பாளராக பிரதியமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிட உள்ள மைத்திரிபால சிறிசேனவே சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார்.
அதேவேளை சுகாதார பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க பதில் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பிரதியமைச்சர் சரத் குமார அந்த அமைச்சின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியதுடன் ராஜித சேனாரத்ன மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சராக பணியாற்றினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq0.html
பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் சகோதரர் கைது!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 08:35.25 AM GMT ]
பொலன்னறுவை மாவட்டத்திற்கு இன்று காலை விரைந்திருந்த இரகசியப்பொலிசார், டட்லி சிறிசேனவை கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரலிய ரக சம்பா அரிசி ஆலை உரிமையாளரான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தார்.
இவர் நினைத்த நேரத்தில் இலங்கை முழுவதும் அரிசியின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ராஜபக்ஷவினர் இவருக்கு வழங்கியிருந்தனர்.
இதற்கு அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 200 கோடி ரூபா கப்பமாக ராஜபக்ஷவினருக்கு வழங்கப்பட்டு வந்தது.
மைத்திரிபால சிறிசேன கட்சி தாவும் தகவல் கிடைத்தவுடன் டட்லி ஊடாகவே அவரைத் தடுத்து நிறுத்தும் பலத்த முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
அதற்காக அவருக்கு கடந்த வாரம் வெளிநாட்டு உல்லாச சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில். டட்லி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அரிசி மொத்த உற்பத்தி மற்றும் விற்பனையில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இரண்டொரு வாரங்களுக்குள்ளாக அரலிய சம்பா அரிசி விற்பனை முற்றாக முடக்கி விடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq1.html
Geen opmerkingen:
Een reactie posten