[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:32.59 AM GMT ]
மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்க இன்றைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளின் ஊடாக சிலர் இலங்கையில் அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர். மக்களின் உரிமைகளை வேறு எவருக்கும் வழங்க தயாரில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
சிறு றப்பர் தோட்ட உரிமையாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று மதியம் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ஐக்கியமாக கட்சிக்குள் தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கு நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியாது.
மக்களும் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்த இன்றை3ய அரசாங்கம் என்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix7.html
இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு! ஜனாதிபதிக்கு சுப்பிரமணியசாமி பாராட்டு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:38.31 AM GMT ]
இது தொடர்பாக பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்திய மீனவர்கள் ஐந்து பேரும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளது. அதற்கான கூடுதல் பங்களிப்பை வழங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் சுப்பிரமணிய சுவாமி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhoy.html
Geen opmerkingen:
Een reactie posten