தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

இன, மத ரீதியில் மாவட்டங்களை பிரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! - எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளும் திட்டத்தில் ஹெல உறுமய

இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு புலிச் செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 11:31.55 PM GMT ]
இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
சுமார் 600 புலிச் செயற்பாட்டாளர்கள் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோரியுள்ளனர்.
வடக்கில் வெளிநாட்டு முதலீடுகளை ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்து இரட்டைக் குடியுரிமை கோரியுள்ளனர்.
புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு வடக்கு வர்த்தகர்களும் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
எவ்வாறெனினும், புலம்பெர் புலிச் செயற்பாட்டாளர்கள் ஈழத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்கள ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக இரட்டை குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw5.html
பொது வேட்பாளர் தெரிவு தொடர்பிலான இறுதிப் பேச்சுவார்த்தைகள் சோபித தேரர் தலைமையில் நாக விஹாரையில்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 11:38.46 PM GMT ]
பொது வேட்பாளர் தெரிவு தொடர்பிலான இறுதிப் பேச்சுவார்த்தைகள் மாதுலுவே சோபித தேரர் தலைமையில் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலி;ல் யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் இதில் பங்கேற்கவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஜனநாயகக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் அல்லது மாதுலுவே சோபித தேரரை போட்டியிடுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பொது வேட்பாளர் குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 8 அல்லது 9ம் திகதியில் பொது வேட்பாளர் பற்றிய அறிவிப்பு ஊடகங்களில் வெளியிடப்படும் என நீதியான சமூகத்திற்கான அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மாதுலுவே சோபித தேரர் நேற்று நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு விஜயமொன்றை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான பணியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw6.html
இன, மத ரீதியில் மாவட்டங்களை பிரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! - எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளும் திட்டத்தில் ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 11:44.22 PM GMT ]
இன அல்லது மத ரீதியில் மாவட்டங்களை பிரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது ஆளும் கட்சிக்கான முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இன அல்லது மத அடிப்படையில் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யோசனையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்டங்களை பிரிப்பது இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கும் இந்த நடவடிக்கை அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம்.
முஸ்லிம்களுக்கு அம்பாறையில் தனி நிர்வாக மாவட்டத்தை கோருவதன் மூலம் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
இவ்வாறான பிரிவினைவாத கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பாரியளவு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளும் திட்டத்தில் ஹெல உறுமய
எதிர்வரும் 15ம் திகதி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள் ஜாதிக ஹெல உறுமய கட்சி திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை என்றால், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அநேகமாக ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிக்கக் கூடும் என குறித்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியிலிலிருந்து விலகுவதற்கு முன்னதாக கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவிலான கூட்டமொன்றையும் ஜாதிக ஹெல உறுமய கட்சி நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, எந்த வகையிலேனும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவினை தக்க வைத்துக்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சி எடுத்து எருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw7.html

Geen opmerkingen:

Een reactie posten