தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 november 2014

ஊடகவியலாளர்களின் உரிமையை உறுதிசெய்ய வேண்டும்: டக்ளஸ்- இலங்கையில் ஊடக நசுக்கல் இல்லை: கெஹலிய!

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் தமிழ்மொழி மூல புதிய வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படவுள்ளன
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:11.57 AM GMT ]
2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பில் வெட்டுப்புள்ளி குறைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடப்படவுள்ளன. கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு இணங்க இந்த புள்ளிக்குறைப்பு இடம்பெறுவதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையின் போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 15ஆயிரத்தில் இருந்து 25ஆயிரமாக உயர்த்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதற்கமைய சிங்கள மொழி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 163இல் இருந்து 157ஆக குறைக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழி மூல புள்ளிகள் 159இல் இருந்து 152ஆக குறைப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாடசாலை மட்டத்திலான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமையää மாணவர் ஒருவர் ஒரு விடைத்;தாளுக்கு 35புள்ளிகளை பெற்றிருந்தால் அத்துடன் இரண்டு விடைத்தாள்களுக்கும் 70 புள்ளிகளை பெற்றிருந்தால்ää அவர் சித்தியெய்தியவராக கருதப்படுவார்.
பரீட்சைகள் ஆணையாளரின் தகவல்படி 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதியன்று வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபெறுகளின் நிமித்தம் 258,000 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.
இதில் 15ஆயிரம் பேரே புலமைப்பரிசில் உதவுத்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் சித்தியடைந்த மாணவர் தொகை, இன்னும் 10ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.
அதேநேரம் புலமைப்பரிசில் உதவுத்தொகையும் 500 ரூபாவில் இருந்து 1500ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlt6.html
ஊடகவியலாளர்களின் உரிமையை உறுதிசெய்ய வேண்டும்: டக்ளஸ்- இலங்கையில் ஊடக நசுக்கல் இல்லை: கெஹலிய
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:24.30 AM GMT ]
ஊடகவியலாளர்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் அனுதாபம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஊடகம் என்பது ஜனநாயகம் நிலைநாட்டப்படும் ஓர் இடமாகும்.
ஊடகவியலாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
பிழைகள் செய்திருந்தால் அது தொடர்பில் விமர்சனத்திற்கு இலக்காவது நியாயமானதே.
பிழை செய்யாத எவரும் இல்லை.
தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகள் குறித்து பேசாது, தமிழ் மக்களை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தும் தரப்பினர் பற்றி ஊடகங்கள் வெளிச்சம் போட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் தமிழ் புத்திஜீவிகளை கொலை செய்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரவணபவன் ஊடகமொன்றை நடத்தி வருகின்றார் எனினும் அவரது ஊடகத்தில் தமிழர் பிரச்சினைகள் பேசப்படுவதில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், புலிகளிடம் பயிற்சி பெற்று, மாணவர்களைக் காட்டிக் கொடுத்து கொழும்பிற்கு தப்பிச் சென்றவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஊடக நசுக்கல் இல்லை-  அமைச்சர் கெஹலிய
அரசாங்கம், இலங்கையில் ஊடகங்களை நசுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், வாராந்த செய்தித்தாள்கள் பார்ப்போமாக இருந்தால் இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடியும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகங்கள் அரசாங்கத்துக்கும் தனிப்பட்ட அரசாங்க அரசியல்வாதிகளுக்கும் எதிராக செய்திகளை பிரசுரிக்க முடிவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய சுமத்திய குற்றச்சாட்டுக்கே பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYluy.html

Geen opmerkingen:

Een reactie posten