[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 11:27.12 AM GMT ]
இந்த பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மக்கள் வசித்து வந்த லயன் வீடுகள் எனப்படும் தோட்ட குடியிருப்புக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் இருக்கும் பாறைகள், புரண்டு விழும் ஆபத்து இருப்பதாக சுரங்கம் மற்றும் புவிச்சரிதவியல் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு பன்விலை பிரதேச செயலாளருக்கு அறிவித்திருந்தது.
2011 ஆம் ஆண்டு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே பிரதேசத்தில் வீடுகளை நிர்மாணிக்க புதிய காணிகளை வழங்கியிருந்தார்.
எனினும் வீடுகளை நிர்மாணிக்க தேவையான பணம் இல்லாத காரணத்தினால், மக்கள் தொடர்ந்தும் ஆபத்தான இடத்திலேயே குடியிருந்து வருகின்றனர்.
இவர்களின் உயிர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் அபாய நிலை இருப்பதால், வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் போதியளவு பணத்தை கொடுக்க வேண்டும் என ஆத்தளை தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfry.html
இலங்கை கிரிக்கெட் அணியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்! சென்னை மாணவர்கள் அமைப்பு வலியுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 11:40.59 AM GMT ]
சென்னை பிரஸ் கிளப்பில் மாணவர்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,
2011 நவம்பர் 28ம் நாள் பார்க் வளைகுடா கடலில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ் மற்றும் வில்சன் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படை சட்ட விரோதமாக கைது செய்து பொய்யான போதை கடத்தல் வழக்கில் சிறையில் அடைத்ததோடு, தற்போது தூக்கு தண்டனை அறிவித்திருக்கும் அராஜகபோக்கை எங்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
நடந்த நிகழ்வு அனைத்தையும் பொறுப்பின்றி வேடிக்கை பார்த்த, பார்த்து கொண்டிருக்கும் ஆளும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
- இலங்கை அராஜகபோக்கை கண்டித்து தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டியில் இருந்து, இலங்கை அணியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
- மத்திய அரசு அறிவித்த இந்திய இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- ஐந்து அப்பாவி மீனவர்களை எவ்வித நிபந்தனையின்றி விடுவிக்க இலங்கை அரசை மத்திய அரசு விலியுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை எங்கள் கூட்டமைப்பு சார்பில் பிசிசிஐ மற்றும் தமிழக ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். மேலும் தொடர்சியாக பல போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfrz.html
Geen opmerkingen:
Een reactie posten