தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

இலங்கையில் பௌத்த மேலாதிக்கம் தடுக்கப்பட வேண்டும்: வினோ எம்.பி



வடமாகாண சபைக்கு கடிதம் அனுப்பிய முல்லை.அரச அதிபர்! கொதித்தெழுந்த சபை உறுப்பினர்கள் - இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 04:17.34 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு ஒரு கடிதத்தின் மூலம் இணைக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டே இணைக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் வடமாகாண சபைக்கு எழுத்துமூலம் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பிரதேச செயலர் பிரிவு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு சட்டபூர்வமான இணைக்கப்படவில்லை.
அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர்கள் சீற்றமடைந்த சம்பவம் மாகாண சபையில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
வடமாகாண சபையில் 19வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது மேற்படி அரசாங்க அதிபரின் கடிதம் சபையில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசிய மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அன்டனி ஜெயநாதன் ஆகியோர் அரசாங்க அதிபரின் கூற்றை ஏற்க மறுத்துள்ளனர்.
விடயம் தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில்,
கடந்த 9ம் மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடிதம் மூலமே இணைக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் வழங்கிய பதில் வழங்கியிருந்தார்.
ஆனால் இன்று 2013ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அதைக் குறிக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இணைத்ததாகவும் மாகாண சபைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார்.
இதனை நாம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. அங்கே சிங்கள மக்கள் வாழும் பகுதி எங்களுடைய தாய்நிலம், அது இன்று சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன.
அந்த நிலத்திற்கான ஆவணங்களை இன்றும் நாங்கள் வைத்திருக்கும் நிலையில் சூனிய பகுதி என கூறிக்கொண்டு சிங்கள குடியேற்றம் செய்தவர்கள் அங்கே வாழ்கிறார்கள்.
எனவே இதனை நாம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அது சட்டபூர்வமற்ற ஒரு பகுதியே அதற்கு வடமாகாண சபையிலிருந்து எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் நாங்கள் செய்யமாட்டோம் என சபையில் சினங்கொண்டு பேசினர்.
இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அதிபரைக் கைது செய்யக்கோரி வடமாகாண சபை கடிதம்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பாடசாலை அதிபரை உடனடியாக கைது செய்யக்கோரி மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயத்தை ஆளுநருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் அதிபர் மேற்கொண்டு ஊழல்கள் தொடர்பாக ஆவணங்களை திரட்டி நடவடிக்கை எடுக்க முயன்ற நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட குறித்த அதிபர் தனக்கு பின்னால் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோர் இருப்பதாக கூறி மாகாண சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த 2ம் திகதி வவுனியா பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய மாகாணசபை அமர்விலும் குறித்த உறுப்பினர் பேசியிருந்ததுடன், குறித்த அதிபரின் ஊழல்கள் தொடர்பில் முழுமையான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மேற்படி அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் கோரிக்கை விடுத்ததுடன், தம்மால் குறித்த அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக அந்த அதிபர் தேசிய பாடசாலை ஒன்றின் அதிபராக இருக்கும் நிலையில் அவர் தொடர்பில் மத்திய கல்வியமைச்சே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மேற்படி அதிபரை கைது செய்ய வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரை கோருவதாகவும் ஆளுநரின் பெயரை பயன்படுத்தி உறுப்பினரை அச்சுறுதியமையினால் ஆளுநருக்கு விடயத்தை தெரியப்படுத்துவதாகவும் அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis7.html
இலங்கையில் பௌத்த மேலாதிக்கம் தடுக்கப்பட வேண்டும்: வினோ எம்.பி
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 04:47.04 PM GMT ]
இலங்கையில் பௌத்த பிக்குகள் அரசியலை தீர்மானிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் இந்தக்கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.
இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களை காப்பாற்றவே போரிடுவதாக கூறி போரை முன்னெடுத்தது. எனினும் இறுதியில் அந்த மக்களுக்கு பாரிய துன்பங்களை அந்த அரசாங்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இன்றும் தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. மதத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. பௌத்த மதத்தலங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பௌத்த மதத்தலைவர்களே தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். ஜனாதிபதி தேர்தல் அல்லது ஏனைய தேர்தல்களில் அவர்களே முதன்மையை பெறுகின்றனர்.
ஏனைய மதங்களின் குருமார்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டால், அது இலங்கையில் மதப்பிரச்சினையை ஏற்படுத்திவிடக்கூடும்.
எனவே பௌத்த பிக்குகளின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வினோநோகராதலிங்கம் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYitz.html

Geen opmerkingen:

Een reactie posten