தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

பதவிக்காகவும் பணத்திற்காகவும் அரசியலில் ஈடுபடவில்லை: ராஜித சேனாரத்ன!

நாங்கள் மெளனமாக இருப்பதே புத்திசாலித்தனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 08:58.50 AM GMT ]
இலங்கைக்குள் சீனாவின் ஊடுருவல் வலுத்து வருவது தெரிந்த உண்மை. இந்திய தேசத்தின் அழுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்காக இலங்கை அரசு கையாளும் இராசதந்திரம் இது.
தமிழகம் இருக்கும் வரை இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை குறித்து இடையிடையே இலங்கை அரசுடன் கதைத்துக் கொள்ளும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும். இவை இலங்கை அரசுக்கு உள்ளூரக் கடுப்பை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயம்.
இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியத் தலையீட்டை இலங்கை அரசுகள் ஒரு போதும் விரும்பவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ இந்தியாவின் தலையீட்டைக் கடுமையாக எதிர்த்தார். இந்தியத் தலையீட்டை நசுக்குவதற்காக விடுதலைப் புலிகளுடன் கூட்டுச் சேரவும் அவர் தயாராக இருந்தார்.
அதாவது இந்தியாவுடன் உறவை வைத்திருப்பதை விட, விடுதலைப் புலிகளுடன் ஒற்றுமையாக இருப்பது எவ்வளவோ மேல் என்பது பிரேமதாஸவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் தலையீட்டை விரும்பவில்லையாயினும் இந்தியா சொல்வதை கேட்காவிட்டால் தனது பிடரியில் அடி விழும் என்று அவர் பயந்தார்.
அவரின் பயத்தை அப்போது இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கை எல்லைக்குள் ஊடுருவி உணவுப் பொட்டலங்களை வடபகுதியில் போட்டு விட்டுப் போன சம்பவம் நியாயப்படுத்தியது.
ஆக, ஜே.ஆர்.ஜெயவர்த்தன பயத்தின் நிமிர்த்தம் இந்தியாவை எதிர்க்கவில்லை. பிரேமதாஸ புலிகளுடன் சேர்ந்து இந்தியாவை எதிர்த்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­  இந்தியாவின் உதவியுடன் விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டு, இப்போது இந்தியாவின் அழுத்தத்திற்கு ஆப்பு வைக்க சீனாவுடன் உறவு கொண்டாடுகிறார்.
சீனாவின் உறவை இந்தியா ஒருபோதும் விரும்பமாட்டாது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவிய சோனியா காந்தியின் மத்திய அரசு, இலங்கை- சீனாவுடன் கொண்டுள்ள உறவை பெரிதுபடுத்தாமல் நடந்து கொண்டது.
இலங்கை அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்பதை சோனியாவின் மத்திய அரசு புரிந்து கொண்டதாயினும் அதுபற்றி இலங்கை அரசை அதட்ட நினைத்தால், தன்மானம் போய்விடும் என்ற அச்சமும் சீனா இந்தியாவிற்குப் பகை.
ஆனால் விடுதலைப் புலிகள் என் குடும்பத்திற்குப் பகை என்ற சோனியாவின் சுயநல சிந்தனையும், சீனாவுடனான உறவு குறித்து இலங்கையை எச்சரிக்கை செய்வதை சோனியாவின் அரசு தவிர்த்துக் கொண்டது.
எனினும் மத்தியில் மோடியின் ஆட்சி ஆரம்பிக்க இலங்கை- சீனாவுடன் கொண்டுள்ள உறவை வெளிப்படையாக எதிர்க்க இந்திய மத்திய அரசு தயாராகிவிட்டது.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை என்பது தமிழர்களோடு சம்பந்தப்பட்டது.
ஆனால், சீனாவுடனான உறவென்பது முழு இந்திய தேசத்திற்கும் ஆபத்தானது. ஆகையால் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவின் காரணமாக இலங்கை - இந்திய உறவு நிச்சயம் பாதிக்கப்படும்.
இச்சந்தர்ப்பத்தில் சீனாவுடனான உறவை இலங்கை அரசு தவிர்க்க வேண்டுமென்று தமிழர்களாகிய நாம் கருத்துக் கூறக்கூடாது.
ஏனெனில் அது இந்தியாவுடன் தொடர்புபட்டது. அதை இந்தியாதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு முன்னதாக, சீன உறவு பற்றி இந்தியா சிந்தித்திருந்தால் நாமும் கருத்துக் கூறியிருக்கலாம்.
ஆனால் நடந்தது வேறு. ஆகையால் இலங்கை - சீன உறவு விடயத்தில் சம்பந்தர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் மெளனமாக இருப்பதே புத்திசாலித்தனம்.
தலையிட வேண்டும் போலிருந்தால் இலங்கை அரசு, சீனாவிற்கு அதீத முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்போம்.
அந்தப் பிரார்த்தனையாவது இந்தியாவிற்கு சுரணையை ஏற்படுத்துகிறதா? என்று பார்க்கலாம்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkt4.html
ஜாதிக ஹெல உறுமய கட்டாயம் அரசில் இருந்து விலகும்!– ரத்ன தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 09:30.12 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் பிரதான செயற்பட்டாளர்களில் 90 வீதமானோர் கூறியுள்ளதாக தூய்மையான நாளை அமைப்பின் ஏற்பாட்டாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி நேற்று அந்த கட்சியின் பிரதான செயற்பாட்டாளர்களை கொழும்புக்கு அழைத்து அரசாங்கத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்று இரகசியமான வாக்கெடுப்பை நடத்தியுள்ளது.
90 வீதமானவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜாதிக ஹெல உறுமய கட்டாயமாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் என ரத்ன தேரர் கூறியுள்ளார்.
தூய்மையான நாளை அமைப்பின் நிலைப்பாடும் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடும் இணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
அரசாங்கம் மக்களுக்காக செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றால் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய எவ்வித தேவையும் எமக்கில்லை எனவும் ரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkt6.html
மகிந்தவின் தேர்தல் இலஞ்சம்: உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 10:35.21 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஆளும் கட்சியின் அனைத்து பிரதேச மாநகர நகர சபை உறுப்பினர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பத்தரமுல்லை பெலவத்தை புத்ததாச விளையாட்டு திடலில் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அவை தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் சைக்கிள்களை நாடு முழுவதிலும் உள்ள அரசாங்கத்தின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் மாத்திரம் வந்து உள்ளூராட்சி சபைகளுக்கு சொந்தமான வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இலவசமாக மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் ராஜபக்ஷவினர் மீது அதிருப்தியில் உள்ள பிரதேச சபைகளின் உறுப்பினர்களை வசப்படுத்துவதற்காக இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அரச நிதி நடைமுறைகளை மீறி அவசரமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது. அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkt7.html
பதவிக்காகவும் பணத்திற்காகவும் அரசியலில் ஈடுபடவில்லை: ராஜித சேனாரத்ன
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 10:59.40 AM GMT ]
அமைச்சு பதவிகளை எதிர்ப்பார்த்தும் பணத்தை எதிர்பார்த்தும் தான் அரசியலில் ஈடுபடுவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
தானும் தமது குடும்பத்தினரும் அசைவ உணவுகள் உண்பதில்லை எனவும் இதனை தான் விரும்பி செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவை மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து விரட்டும் சூழ்ச்சி திட்டங்கள் அரசாங்கத்திற்குள் இருப்பதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், வெறுப்பில் இருந்த அமைச்சர்கள் பலர் அரசாங்கத்தில் இருந்து விலகி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க அணித்திரள்வார்கள் என கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkuy.html

Geen opmerkingen:

Een reactie posten