[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 12:58.22 AM GMT ]
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் நிச்சயமாக ஜனவரி 2ம் திகதி நடைபெறாது. ஏனெனில் அது ஒரு வெள்ளிக்கிழமை அத்துடன் பௌர்ணமி தினம் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தேர்தல் ஜனவரி 3ம், 7ம் அல்லது 10ம் திகதிகளில் நடைபெறுமா? என்று கேட்ட போது அது கடவுளுக்கே தெரியும் என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
எல்லாமே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளர் தலைமையில் விசேட கூட்டம்
ஜனாதிபதி தோதல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
நாளை இந்தக் கூட்டம் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
நாளை பிற்பகல் 3.00 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள், மாவட்டச் தெரிவத்தாட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணையாளரை சந்திக்க உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்ளல், வேட்பு மனுக் கோரல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்பட வேண்டிய சிக்கல்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
கட்சிகளின் செயலாளர்களுடனும் தேர்தல் ஆணையாளர் சந்திப்பு நடத்த உள்ளார்.
இந்த சந்திப்பிலும் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiuy.html
விடுதலையான இந்திய மீனவர்கள்!- இலங்கை மீனவர்களின் நிலை என்ன? அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 12:31.39 AM GMT ] [ பி.பி.சி ]
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்று தண்டனை பெற்றவர்களில் ஒருவராகிய மண்டைதீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
எனது கணவருடன் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவரையுமே ஐந்து இந்திய மீனவர்களுடன் வழக்கில் தண்டனை வழங்கியிருந்தார்கள்.
இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும் போது எங்கள் கணவன்மாரையும் விடுதலை செய்யாதது ஏன்? அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை", என்று மரிய புளோரன்ஸ் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும் மூன்று வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
இவர்களை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் நாங்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்குப் போயிருந்தோம். ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
இப்போது அவர்களுடன் தண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களை பொதுமன்னிப்பு என்று விடுதலை செய்துவிட்டார்கள்.
ஆனால் எங்கள் உறவுகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். எனது கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது", என்றும் மரிய புளோரன்ஸ் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYit5.html
Geen opmerkingen:
Een reactie posten