தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

சோபித தேரர் இன்றி உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த ஐ.தே.கட்சியின் தலைவர்

மண்சரிவில் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்தும் முகாம்களில் அவலம்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 05:44.02 AM GMT ]
கொஸ்லாந்தை மீரிபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் உறவுகளையும் குடியிருப்புக்களையும் இழந்த மக்கள் தொடர்ந்தும் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டு்ள்ளதால் அவர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஈ.எல்.ஏ.எம்.உதயகுமார தெரிவித்தார்.
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேயிலை தொழிற்சாலையை இராணுவத்தினர் புனரமைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் வரை அவர்கள் குறித்த தேயிலை தொழிற்சாலைகளில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் உறவுகளையும் இருப்பிடங்களையும் இழந்த 78 குடும்பங்களைச் சேர்ந்த 265 பேர் தொடர்ந்தும் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, மண் சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்து கொஸ்லாந்தை கணேஷா தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
131 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் நேற்று மாலை தற்காலிக முகாமில் இருந்து வீடுகளுக்கு திரும்பியதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மண் சரிவு அபாயம் தொடர்பிலான அச்சத்துடனேயே மீண்டும் குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp1.html

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டது: வட மாகாண மீன்பிடி அமைச்சர்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 06:03.10 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்றயதினம் இடம்பெற்றது.
நேற்று காலை 11 மணியளவில் வவுனிக்குளம் சென்ற வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபையின் முல்லைத்திவு மாவட்ட உறுப்பினர் திரு ரவிகரன் அவர்களின் பிரதிநிதி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர், நீரியல் வள மாவட்ட அலுவலர் சலீபன்  ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தினரையும் அங்குள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தினரையும் சந்தித்து உரையாடியதுடன்  அக்குளத்தில் மீன்குஞ்சுகளையும் விட்டனர் தொடர்ந்து மதியம் சுமார் 2:00 மணியளவில் முத்தையன்கட்டு குளத்துக்கு விஜயம் செய்தவேளை அங்கு முல்லைத்திவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன்  அவர்களும் இணைந்து அங்குள்ள மக்களையும் சந்தித்து பின்னர் அக் குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மடவாளசிங்கம் குளத்து மீன்பிடியாலர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியதுடன் அக்குளத்துக்கும் மீன்குஞ்சுகள்  விடப்பட்டது.
நேற்றைய இந்நிகழ்வில் சுமார் 75000 மீன்குஞ்சுகள் மூன்று குளங்களிலும் முதற்கட்டமாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் மக்களுக்கு இரண்டு மாத காலத்துக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக விடப்பட்டது.
இதன் மூலம் சுமார் 250 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp2.html
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு 19 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 06:20.44 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ளார்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை முடிவு செய்வார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp3.html
சோபித தேரர் இன்றி உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த ஐ.தே.கட்சியின் தலைவர்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 06:36.00 AM GMT ]
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் இன்றி பொது புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கையெழுத்திடப்படவிருந்தது.
அதில் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, சரத் பொன்சேகா உட்பட அரசியல் தலைவர்களும் சிவில் அமைப்பின் தலைவர்களும் அத்துரலியே ரத்ன தேரர், மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோர் கையெழுத்திட தீர்மானித்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp4.html
அரசில் இருந்து முதலில் வெளியேற போவது மேர்வின் சில்வா!?
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 07:01.42 AM GMT ]
அரசாங்கத்தில் இருந்து பல அமைச்சர்கள் வெளியேற உள்ள நிலையில், முதலில் அமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேர்வின் சில்வா கடந்த சில தினங்களாக இது பற்றிய ஊகங்கள் சிலவற்றை வெளியிட்டார். அடுத்த வாரம் கிரகப் பெயர்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் கூறியதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த செய்தியில் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அரசாங்கத்தில் உள்ள சிலர் எம்மை பயமுறுத்த கோப்புகளை காட்டுகின்றனர்.
இதனால், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு பல காலங்களுக்கு முன்னரே வந்து விட்டது. ஜனாதிபதி காரணமாகவே அதனை செய்யாதிருக்கின்றேன்.
பெலியத்தையில் இருந்து கொழும்பு வந்த எங்களுக்கு எந்த சிரமத்தை தாங்கி கொள்ள முடியும்.
பொலிஸ் பாதுகாப்புடன் நாங்கள் கொழும்புக்கு வரவில்லை. பொலிஸ் பாதுகாப்பது என்பது எனக்கு சில காலங்களுக்கு முன்னர் கிடைத்த ஒன்று.
பாதுகாப்பு இல்லை என்றாலும் எங்களுக்கு ஒன்றும் நடந்து விடாது. நான், மங்கள போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் நின்றாலும் எங்கள் சாதியினர் எமக்கு வாக்களிப்பர்.
எம்மை ஒதுக்கி விட்டால் எங்களின் அருமை புரிய வேண்டியவர்களுக்கு புரியும். இதனால் அடுத்த ஒரு வாரத்தில் சிறந்த கிரக மாற்றம் ஏற்படுவதை காணமுடியும்.
மேர்வின் சில்வா அந்த கோப்புகளுக்கு பயந்தவன் அல்ல. எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாகி மூக்கு உடைந்துள்ளது. ஆனால் இன்னும் பிணை வழங்கப்படவில்லை. ஏன் பிணை கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியும். இந்த விளையாட்டை தொடர்ந்தும் ஆட முடியாது என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp5.html

Geen opmerkingen:

Een reactie posten