[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 11:30.46 PM GMT ]
மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2.30 அளவில் மீண்டும் கூடி இந்த விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.
நீதியரசர்களுக்கு இடையில் நடைபெறும் கூட்டத்தைத் தொடர்ந்தே ஜனாதிபதிக்கு சட்ட விளக்கம் பற்றிய அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக, ஈவா வனசுந்தர, பிரியசாப் டொஸ், ரோஹினி மாரசிங்க, புவனக அலுவிஹார, சிசிர ஆப்ரூ, சரத் டி ஆப்ரூ, பிரியந்த தசநாயக்க ஆகியோர் பிரதம நீதியரசருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர்.
ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் விருப்பமானவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்ற உச்ச நீதிமன்றின் அறிவிப்பிற்கு அமைய 40 பேர் தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXer2.html
ஜனாதிபதியை தோற்கடிக்க சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் இணைந்து கொள்வார்கள்!- அதுரலிய ரதன தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 11:44.33 PM GMT ]
நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் எதிர்வரும் 19ம் திகதியின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டால், புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த முயற்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கைகளும் இணைந்து கொள்ளும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக் காலம் முடிவடைய இன்னமும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தால் நாம் மட்டுமன்றி பல சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தயார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
பொது வேட்பாளர் மக்களின் மத்தியில் இருந்தே உருவாவார் என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தர்மவிஜய அமைப்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXer4.html
கொஸ்லந்தையில் நேற்றும் மூன்று சடலங்கள் மீட்பு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:37.12 AM GMT ]
இதன்போது பெண் ஒருவரினதும் சிறுமி ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மத்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.
மற்றைய சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் டி. என். ஏ. சோதனைகளுக்காக அனுப்பி வைப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் மீட்பு பணிகளை இடை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் மீண்டும் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், மீட்புப் பணிகளை கைவிடுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென அரசாங்க அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.
மீட்பு பணிகளைக் கைவிடுவது இன்னும் பேச்சு மட்டத்திலேயே இருப்பதனாலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை எதனையும் திட்டவட்டமாகக் கூற முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த சனிக்கிழமை மீரியபெத்த பகுதிக்கு விஜயம் செய்த போது, மீட்பு பணிகளை நிறுத்துமாறு பிரதேசவாசிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை நிறுத்த நேற்று ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே மீண்டும் இராணுவ அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.
தற்போது மீட்கும் சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருப்பதனாலும் சடலங்களின் பாகங்கள் கண்டெடுக்கப்படுவதனாலும் உறவினர்கள் பாரிய உளத்தாக்கத்திற்கு உள்ளாவதாக அமைச்சரிடம் கூறியிருந்தனர்.
உறவினர்கள் கேட்டுக்கொள்வார்களாயின் ஜனாதிபதி அவர்களுடன் இது குறித்து பேச்சு நடத்தி விரைவில் தீர்மானமொன்று முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXer7.html
மகளிர் அணி கிரிக்கெட் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை அவசியம்!- ஜே.வி.பி
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 01:04.01 AM GMT ]
ஜே.வி.பி. யின் பெண்கள் பிரிவு இந்தக் கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் விடுத்துள்ளது.
ஜே.வி.பி பெண்கள் அணியின் உதவி தலைவர் சமன்மாலி குருசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், அது மகளிர் கிரிக்கெட் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சமன்மாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டுக்கள் இலங்கைக்கு கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அந்த கீர்த்தியை பாதிக்கும் என்றும் சமன்மாலி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXesy.html
மாவீரர் நாள் அச்சம்!- யாழில் இராணுவ நடமாட்டம் அதிகரிப்பு!
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 01:38.14 AM GMT ]
அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டுள்ளனர்.
இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வளாக சூழலில் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலை கொண்டும் உள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகத்திற்கு சென்று வரும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது.
அத்துடன் யாழ்.பல்கலையில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்திருப்பது மாணவர் மத்தியிலும் அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித பயத்தையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்ற நிலையிலேயே இராணுவத்தின் பிரசன்னம் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களில் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கெடுபிடிகள் நடக்கலாம் என்றும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழில் இளைஞர்களும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதை தடுப்பதற்கே இவ்வாறான முன் ஆயத்தங்களை அரசாங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXes0.html
Geen opmerkingen:
Een reactie posten