[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:42.25 AM GMT ]
நோர்வே, புலிகளின் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்கியது. அதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளன என்று ஜனாதிபதி குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குற்றம் சுமத்தினார்.
அத்துடன் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு பக்கபலமாக செயற்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அந்த மனிதன், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr6.html
பொதுவேட்பாளராக போட்டியிட தயார்!- அர்ஜூன ரணதுங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:48.21 AM GMT ]
ஏற்கனவே மாதுலுவாவே சோபித தேரரின் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் தாம் எப்போதும் நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாக எந்தக் கட்சியும் பொதுமக்களும் விரும்பினால் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயார் என்று அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலைக்கு தகுதியானவன் என்று கருதினால் தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தாம் ஒருபோதும் பதவிக்காக பணியாற்றியதில்லை. நாட்டை பாதுகாக்கும் விடயங்களையே முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருந்தாலும் தற்போது நாட்டுக்கு பொதுவான தேவையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே என்று ரணதுங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr7.html
இலங்கை அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 02:44.48 AM GMT ]
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்திய அகதி முகாம்களில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் விரைவில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக வடமாகாணசபை தெரிவித்துள்ளது.
இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளை நாடு திரும்புமாறு கட்டாயப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYks0.html
Geen opmerkingen:
Een reactie posten